ஆயாமா, ஈவாவா
āyāmā, īvāvā
(Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர்.
(Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும், இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி, ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 446)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqvxnv3f/
தமிழ்“ஆயாமா, ஈவாவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqvxnv3f/APA
Oliyon Research. (2026). ஆயாமா, ஈவாவா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqvxnv3f/MLA
"ஆயாமா, ஈவாவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xqvxnv3f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment