{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xqvxnv3f/", "data": {"id": "xqvxnv3f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xqvxnv3f/", "kind": "article", "headword": "ஆயாமா, ஈவாவா", "romanization": "āyāmā, īvāvā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.118799+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர்.", "body_ta": "(Oyama, Iwao 1842-1916) ஜப்பானியத் தளகர்த்தர். இவர் சட்சுமா நகரிற் பிறந்தார். 1877-ல் அரசருக்கு எதிராக நடந்த கலகத்தை அடக்க இவர் உதவினார். 1894-ல் சீன-ஜப்பானியப் போர் தொடங்கியதும், இவர் ஒரு சேனையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இச்சேனை போர்ட் ஆர்தர் துறைமுகத்தை வெற்றியுடன் தாக்கி முன்னேறியது. இச்சேவைக்காக இவர் பிரபுவாக்கப்பட்டார். 1904-ல் ரஷ்ய-ஜப்பானியப் போரில் இவர் மஞ்சூரியாவில் ஜப்பானியச் சேனைகளுக்குப் பிரதம தளபதியாக்கப்பட்டார். இதில் இவர் அடைந்த வெற்றியைப் பாராட்டி, ஜப்பானியச் சக்கரவர்த்தி இவரை இளவரசராக்கினார்."}}