இளங்கோவதியரையனான விக்கிரமபூதி
iḷaṅkōvatiyaraiyaṉāṉa vikkiramapūti
என்பான் வேளிர் மரபினன்; கோனாட்டையாண்ட கொடும்பாளூர்ச் சிற்றரசன், இவன் பல்லவர்க்கு உட்பட்டவன்; கி.பி.
என்பான் வேளிர் மரபினன்; கோனாட்டையாண்ட கொடும்பாளூர்ச் சிற்றரசன், இவன் பல்லவர்க்கு உட்பட்டவன்; கி.பி. 9–ஆம் நூற்றாண்டினன்.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் கீழூரில் உள்ள மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் 11–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, விடேல்விடுகு இளங்கோவதியரையனான விக்கிரம பூதியின் மகளான சாத்தன் மறவனின் தேவி திருக்கோவலூர் இறைவற்குப் பொன்தானம் அளித்ததைக் குறிக்கிறது. இதனால், மூன்றாம் நந்திவர்ம பல்லவனது ஆட்சிக் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டு வந்த தலைவர்களுள் இளங்கோவதியரையனான விக்கிரம பூதி குறிப்பிடத்தக்கவன் என்பது விளங்கும். ‘விடேல்விடுகு’ என்றும் பட்டம் பூண்டுளதால் இவன் பல்லவனுக்குட்பட்டவன் என்பது தெளிவு. க.ம.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 482)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xqrdacme/
தமிழ்“இளங்கோவதியரையனான விக்கிரமபூதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xqrdacme/APA
Oliyon Research. (2026). இளங்கோவதியரையனான விக்கிரமபூதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xqrdacme/MLA
"இளங்கோவதியரையனான விக்கிரமபூதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xqrdacme/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment