{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xqrdacme/", "data": {"id": "xqrdacme", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xqrdacme/", "kind": "article", "headword": "இளங்கோவதியரையனான விக்கிரமபூதி", "romanization": "iḷaṅkōvatiyaraiyaṉāṉa vikkiramapūti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.958610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பான் வேளிர் மரபினன்; கோனாட்டையாண்ட கொடும்பாளூர்ச் சிற்றரசன், இவன் பல்லவர்க்கு உட்பட்டவன்; கி.பி.", "body_ta": "என்பான் வேளிர் மரபினன்; கோனாட்டையாண்ட கொடும்பாளூர்ச் சிற்றரசன், இவன் பல்லவர்க்கு உட்பட்டவன்; கி.பி. 9–ஆம் நூற்றாண்டினன்.\n\nதென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் கீழூரில் உள்ள மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் 11–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, விடேல்விடுகு இளங்கோவதியரையனான விக்கிரம பூதியின் மகளான சாத்தன் மறவனின் தேவி திருக்கோவலூர் இறைவற்குப் பொன்தானம் அளித்ததைக் குறிக்கிறது. இதனால், மூன்றாம் நந்திவர்ம பல்லவனது ஆட்சிக் காலத்தில் கொடும்பாளூரை ஆண்டு வந்த தலைவர்களுள் இளங்கோவதியரையனான விக்கிரம பூதி குறிப்பிடத்தக்கவன் என்பது விளங்கும். ‘விடேல்விடுகு’ என்றும் பட்டம் பூண்டுளதால் இவன் பல்லவனுக்குட்பட்டவன் என்பது தெளிவு. க.ம."}}