சிறுநீரகப் பணிகள்
ciṟunīrakap paṇikaḷ
சிறுநீரகம் கழிவு மண்டலத்தின் மிக முக்கிய உறுப்பாகும்.
சிறுநீரகம் கழிவு மண்டலத்தின் மிக முக்கிய உறுப்பாகும். உடலின் குருதியோட்டத்தில் இருக்கக் கூடிய பலவேறு கழிவுப் பொருள்களையும், வேண்டாத வேதிமங்களையும் நீக்கி, அவற்றை வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் ஏற்றுக் கொள்கின்றன. உடலின் நீர்ச் சமநிலை, அமில காரச் சமநிலை போன்றவற்றைச் சீர்படுத்துவதிலும், மருந்து உட்கொள்ளும் பிற பொருள்களின் ஆக்கச் சிதை மாற்றத்திலும், குருதியழுத்தச் சீரமைப்பிலும் சிறுநீரகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
சிறுநீரகம். உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது; குறிப்பாக, புரத ஆக்கச் சிதை மாற்றத்தின் இறுதிப் பொருள்களில் நச்சியல்பு குறைக்கப்பட்டு, தீங்கற்ற முறையில் உடலிலிருந்து வெளித் தள்ளப்படுகின்றது. உடல் நீர்மங்கள், மின் பகுளிகள் (electrolytes) முதலியவற்றில் ஹைட்ரஜன் அயனிச் செறிவை நிலைப்படுத்துகிறது. உடலின் நீர்ச் சமன்பாட்டைச் சீரமைக்கிறது; இதனால், ஊணீர் அளவும், அதன் விளைவாக, உடலின் குருதியளவும் சரியான நிலையில் காக்கப்படுகின்றன. குருதிக் கரிம, கனிமப் பொருள்களின் செறிவை நிலைப்படுத்துகிறது. சிறப்பு மீவுறிஞ்சல் (selective resorption) மூலமாக இது இயலும், மருந்துகளின் கடை நிலைப் பொருள்கள் மற்றும் நச்சுப் பொருள்களை உடலினின்று வெளியேற்றுகிறது. அம்மோனியா, ஹிப்யூரிக் அமிலம் ஆகிய பொருள்களை உண்டாக்குகிறது. குருதி, திசு ஆகியவற்றின் சவ்வூடு அழுத்தங்களை (osmotic pressure) நிலைப்படுத்துவதில் உதவுகிறது. குருதி அழுத்தத்தை அறுதியிட்டுச் சீராக வைக்கிறது. குருதிச் செவ்வணுக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கிறது. வைட்டமின் Dஇன் ஆக்கச் சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது. —சுதா சேஷய்யன் நூலோதி. B.M Brenner et al, The Kidney, Vol. 1 and 2, W.B Saunders Co., Philadelphia, 1981.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 367)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xnysgg8n/
தமிழ்“சிறுநீரகப் பணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xnysgg8n/APA
Oliyon Research. (2026). சிறுநீரகப் பணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xnysgg8n/MLA
"சிறுநீரகப் பணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xnysgg8n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment