சிவஞான சித்தியார்

civañāṉa cittiyār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவசித்தாந்த கொள்கைகளைக் கொண்ட சிறந்த நூல் ஆகும். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிவஞான சித்தியார்)
2.
மெய்கண்ட நூல்கள் எனப்படும் சித்தாந்த சாத்திரம் 14 களுள் ஒன்று. சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் விளக்கம் கூறும் நூல். இதில் சுபக்கம் பரபக்கம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. சுபக்கம் சைவசித்தாந்த சிறப்பையும், பரக்கம் பிற சமயக் கொள்கைளை எடுத்துக்காட்டி அவற்றை மறுத்துச் சைவசித்தாந்த கொள்கையினை நிலைநிறுத்தும். இதன் ஆசிரியர் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள். காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குச் சிவஞான முனிவர் பொழிப்புரை எழுதியுள்ளார். சுபக்கத்திற்கு ஞானப்பிரகாச தேசிகரும், மறைஞான தேசிகரும், பரபக்கத்திற்குத் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் என்பவரும் உரை எழுதியுள்ளார். இந்நூலுக்கு ஞானாபரண உரை ஒன்று வெள்ளியம்பலத் தம்பிரானால் எழுதப்பட்டது. பதவுரை சுப்பிரமணிய தேசிகரால் எழுதப்பட்டது. விருத்தியுரை சிவாக்கர யோகிகளால் எழுதப்பட்டது. இந்நூலால் பதி, பசு, பாச இலக்கணங்களையும். சைவசித்தாந்த உண்மைகளையும், மேன்மைகளையும் நன்கு உணரலாம். இந்நூலில் உள்ள செய்யுட்களில் ஒன்றன பாதி விருத்தமே சித்தாந்த
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 493)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xgzw745v/

தமிழ்
“சிவஞான சித்தியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgzw745v/
APA
Oliyon Research. (2026). சிவஞான சித்தியார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xgzw745v/
MLA
"சிவஞான சித்தியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xgzw745v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment