சிறு கீரை
ciṟu kīrai
இதன் வேறு பெயர்கள் சில்லி, மேநாதம், சாகினி ஆகும்.
இதன் வேறு பெயர்கள் சில்லி, மேநாதம், சாகினி ஆகும். இதன் தாவரவியல் பெயர் அமராந்தஸ் பாலிகேமஸ் (Amaranthus Polygamus) என்பதாகும். இதற்கு அ.பாலிகொனாய்டெஸ் என்று வேறொரு பெயரும் உண்டு. இந்தக் கீரைச் செடியை இந்தியாவின் பல பகுதிகளிலும் காணலாம். வட இந்திய மலைப் பகுதிகளில் இக்கீரை மிகுதியாக விளைவது குறிப்பிடத் தக்கது. தண்டுக் கீரையைப் போன்றே இதுவும் அமராந்தேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் கீரைகளில் இதுவும் ஒன்று. தரிசு நிலங்களில் களைச் செடியாகக் காணப்படும் இதனைச் சாகுபடி நிலத்திலும் காணலாம்.
செடி. 30 செ.மீ. உயரம் வளரக் கூடிய இச்செடியில் இலைகள் மாற்றடுக்கத்தில் தலை கீழ் முட்டை வடிவில் இருக்கும். முனை மழுங்கியது. 7.5 X 5.0 செ.மீ. அளவுடையது. இலைக் காம்பு 5 செ.மீ. நீளமுள்ளது. பூக்கள் ஒரு பால் தன்மை (monoecious) உடையன. மஞ்சரி இலைக் கக்கங்களில் கதிராகத் தோன்றும். பூவடிச் சிதல்கள் பச்சையாகவும், உதிராமலும் இருக்கும். பூக்காம்புச் சிதல்கள் கூரிய நுனியுடன் சில சமயம் முள் போன்று இருக்கும். பூவிதழ்கள் (perianth) 2—5 சவ்வு போன்ற கதுப்புகளைக் கொண்டிருக்கும். ஆண் பூக்களின் இதழ்கள் முட்டை—ஈட்டி வடிவிலும் நுனி கூரிய முள் போன்ற அமைப்பிலும் இருக்கும். ஆனால், இதன் இதழ்களில் நீள் சதுரம் அல்லது தலை கீழ் முட்டை வடிவ மகரந்தக் கேசரங்கள் 2—5 இருக்கும். மகரந்தக் கம்பிகள் தனியானவை. மகரந்தப் பைகள் இரட்டைத் திசுவறைகளைக் கொண்டு இருக்கும். சூல்பை முட்டை வடிவானது, தட்டையானது, ஒற்றைத் திசுவறையைக் கொண்டது. சூலில் ஒன்று நேராக இருக்கும். சூலகத் தண்டு குட்டையாகவோ இல்லாமலோ இருக்கலாம். சூலக முடி 2-3. கனி வெடியா வகையாகும். இது முட்டை வடிவானது. விதை தட்டையாகவும் வட்டமாகவும் இருக்கும்.
சாகுபடி முறை. நிலத்தை நன்கு உழுது, ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் இட்டுச் சிறு கீரையைப் பயிருடன் கோடைக் காலத்தில் பயிரிட வேண்டும். தேவையான விதைகளை மணலுடன் கலந்து, விதைக்க வேண்டும். ஒரு ஹெக்ட்டேர் நிலப் பரப்பிற்கு 3—3.5 கி.கி. விதைகளைப் பத்துப் பங்கு மணலுடன் கலந்து தெளிப்பு முறையில் விதைத்து மூட வேண்டும். விதைகளை எறும்புகள் எடுத்துச் செல்லாமல் இருக்க BHC 10% தூளைப் பாத்திகளின் ஓரங்களில் தூவ வேண்டும். பின்பு நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் ஈரத்திற்கு ஏற்ப 7—10 நாளுக்கு நீர் பாய்ச்சி, போதிய அளவு தழை உரம் இட்டு வந்தால், மிகுந்த விளைச்சல் கிடைக்கும். இச்செடியில் கீரையை, 10 செமீ. உயரம் வந்தவுடன் அறுவடை செய்ய- லாம். இவ்வாறு வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம். இதன் வயது 60—75 நாள். ஒரு ஹெக்ட்டேரிலிருந்து 7500 கி.கி. கீரை கிடைக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பயன்கள். சிறு கீரையைத் தோட்டப் பயிராக வீட்டுத் தோட்டங்களில் வளர்த்துப் பயன் பெறலாம். இக்கீரையைச் சமைத்துண்ண உடல் வலிவு பெறும். முகம் பொலிவுறும், பித்தம், வாத நோய் நீங்கும். சிறு நீரகம், கல்லீரலுக்கு நன்மை தரும். இது நச்சுகளை முறிப்பதாக அறியப்படுகிறது எலும்பு வளர்ச்சிக்கு உதவும். மருந்துகளால் ஏற்படும் உடல் எரிச்சல், சூட்டைத் தணிக்கும். உடலில் உண்டாகும் புண்களைக் குணமாக்கும். மதுவருந்துவதால் உண்டாகும் குடல், சிறுநீர்ப் பை நோய்களுக்கு உதவும். இக்கீரை சோகையைப் போக்கும். உடலிலுள்ள கெட்ட நீர், இறுகிய மலத்தை வெளித் தள்ளும். வீக்கம் கரையவும், காச நோய்கள் நீங்கவும் உதவும். —கோ.அர்ச்சுணன்
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. இங்கு புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xbytswfr/
தமிழ்“சிறு கீரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xbytswfr/APA
Oliyon Research. (2026). சிறு கீரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xbytswfr/MLA
"சிறு கீரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xbytswfr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment