நொதிச் செயலியல்
notic ceyaliyal
இரைப்பை, குடல் மண்டலம் வழியாகவே பெரும்பாலான சத்துப் பொருள், வைட்டமின், தாதுப் பொருள், நீர்மம் ஆகியன உட்கவரப் படுகின்றன.
இரைப்பை, குடல் மண்டலம் வழியாகவே பெரும்பாலான சத்துப் பொருள், வைட்டமின், தாதுப் பொருள், நீர்மம் ஆகியன உட்கவரப் படுகின்றன. புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் யாவும் உடைக்கப் பட்டுச் செரிமானமாகும் நிலையில், சிறு குடலுக்குள் அனுப்பப் படுகின்றன. செரிமான மான பொருள் வைட்டமின், தாதுப் பொருள், நீர் யாவும் சிலேட்டுமப் படலத்தை ஊடுருவி, நிண நீர் அல்லது குருதியை அடைகின்றன. செரிமானம் அடைய மிகவும் தேவையானவை செரிமான நொதிகளாகும். இவற்றில் சில உமிழ் நீர்ச் சுரப்புக் கட்டிகளிலும், இரைப்பைகளிலும், கணையத்திலும் காணப் படுகின்றன. சில நொதிகள் சிறு குடலின் செல் படலங்களில் அமைந்துள்ளன. இரைப் பையில் சுரக்கப் படும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கல்லீரலில் சுரக்கும் பித்த நீரும், நொதிகளுக்கு உறுதுணையாக உள்ளன.
உமிழ் நீர்ச் சுரப்பிகளின் நொதியான உமிழ் நீர், அமைலேஸ் நீர்மமாகி, டெக்ஸ்டிரின், மால்ட்டோ டிரியோஸ் ஆகியவற்றை உண்டாக்கும். இரைப் பையின் நொதிகளான பெப்சின், டிரிப்சின், கைமோடிரிப்சின்,எலாஸ்டேஸ், கார்பாக்சிபெப்டிடேஸ் ஆகியவை ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் எண்டரோகைனேஸ், டிரிப்சின் ஆகியவற்றின் உதவியால், அமினோ அமிலத்தையும், அர்ஜினின், லைசின் ஆகியவற்றையும் உருவாக்குகின்றன. கணையத்தின் நொதிகளான கார்பர்க்சிபெப்டிடேஸ் B கணைய லைபேஸ், கணைய எஸ்ட்ரேஸ், கணைய அமைலேஸ், ரிபோ நியூக்ளியேஸ், டி ஆக்சிரிபோ நியூக்ளியேஸ், பாஸ்ஃபோலைப்பேஸ் ஆகியவை டிரிப்பிசினன் உதவியால், அமினோ அமிலம், மோனோ கிளிசரைடு ,கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் நியூக்ளியோடைடு, லைசோ லெசித்தீன் ஆகியவற்றை உருவாக்குகின்றன. சிறு குடல் சிலேட்டுமப் படலத்திலிருந்து எண்டரோ பெப்டிடேஸ், அமினோ பெப்டிடேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ், நியூக்ளியேஸ் போன்ற நொதிகள் உண்டாகி, டிரிப்சின், அமினோ அமிலம், குளுகோஸ் , காலக்டோஸ், பெண்டோஸ்,பியூரின், பிரிமிடின் ஆகியவற்றை உருவாக்குகின்றன. பின்னர், இரைப்பைச் சிறு குடல் துளையிலிருந்து குருதி ஓட்டத்தைப் பரவல் (diffusion) முறை மூலம் அடைகின்றன.
சிறு குடலில் சிலேட்டுமச் செல்களில் பிரஷ் விளிம்பு (brush border) இருக்கிறது. இதில், நுண் உறிஞ்சி கிளைகோகாலிக்ஸ் என்னும் அடுக்கால் மூடப் பட்டுள்ளது. இதில், அமினோ சர்க்கரை காணப் படுகிறது. கடைச் சிறு குடலின் துளை 0.75 மி.மி. விட்டமாகவும், இலியத்தின் துளை 0.35 மி.மி. ஆகவும் அமையும். நொதி இரா விடில், செரிமானமும், உட்கவர்தலும் நடைபெறாது. பெரும்பாலான இரைப்பை–சிறு குடல் நோய்கள் நொதி இன்மையால் உண்டாகின்றன. —மு.கி.பழனியப்பன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 294)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xaea5bj6/
தமிழ்“நொதிச் செயலியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xaea5bj6/APA
Oliyon Research. (2026). நொதிச் செயலியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xaea5bj6/MLA
"நொதிச் செயலியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xaea5bj6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment