சுவாசப் பாதையில் வேற்றுப் பொருள்
cuvācap pātaiyil vēṟṟup poruḷ
சுவாசப் பானதையான குரல் வளை, மூச்சுக் குழாய், மூச்சுக் கிளைக் குழாய் ஆகியவற்றில் வேற்றுப் பொருள் செல்வதில்லை.
சுவாசப் பானதையான குரல் வளை, மூச்சுக் குழாய், மூச்சுக் கிளைக் குழாய் ஆகியவற்றில் வேற்றுப் பொருள் செல்வதில்லை. தொண்டையிலுள்ள பொருள் எதிர்பாராமல் திடீரெனக் குரல் வளையுள் செல்வதும், விபத்தில் காயமடைந்தால் பல், குருதி, உமிழ் நீர்போன்றவை சுவாசப் பாதையுள் செல்வதும் உண்டு.
சுவாசப் பாதைக்குத் துய காற்றைத் தவிர, ஏனைய வளிம, திண்ம, நீர்மப் பொருள்கள், (நீர் அல்லது கடல் நீர் உட்பட) ஆகியவை வேற்றுப் பொருள்களே ஆகும். வேற்றுப் பொருள் சுவாசப் பாதையில் செல்லாதவாறு, தொண்டை, குரல் வளையைச் சுற்றியுள்ள சுருங்கு தசைகள் பாதுகாக்கின்றன. உணவை விழுங்கும் போது, குரல் வளை மேலே உயர்ந்து மூடிக் கொள்கிறது. உணவுப் பாதை விரிந்து, உணவு உருண்டையைப் பெற்றுக் கொள்கிறது. ஆனால், தொண்டையில் உணவுப் பொருள் அல்லது வேற்றுப் பொருள் இருக்கும் போது, சிரித்தாலும், அழுதாலும், உணர்ச்சி வயப்பட்டாலும், இப்பாதுகாப்புத் திறன் சிறிது தளர்ந்து விடுகிறது.
நோய் அல்லது தலைக் காயங்களால் மயங்கிய நிலையில் இருப்போருக்கும், குடி போதையில் மயங்கி இருப்போருக்கும், இத்திறன் குறைந்து காணப்படும். வாயில் குண்டூசியை வைத்துக் கொண்டு சிரிக்கும் போது, திடீரென்று, அது சுவாசப் பாதையில் சென்று விடுவதும் உண்டு. இந்நிலையில், தொண்டையிலுள்ள பொருள் குரல் வளையுள் சென்று விடுகிறது. அப்போதும், அனிச்சையாக இருமல் வந்து, அயல் பொருளை வெளியேற்ற முயற்சி செய்யும். சில வேளையில் அப்பொருள் வெளியேறி விடுகிறது.
குரல் வளையில் புகுந்த பொருள், குரல் நாண்கள் விறைத்துக் கொள்வதால், நாண்களுக்கிடையே சிக்கிக் கொள்கிறது. சிறிய பொருள் மூச்சுக் குழலுக்குள் இறங்கி, மூச்சு விடும் போது, மேலும், கீழும் ஏறி இறங்குகிறது. அப்போது‘தட்’ என்ற ஓலி வெளியே கேட்கும். மிகச் சிறிய பொருள், மூச்சுக் கிளைக் குழாயுள்ளோ, கிளைச் சிறு குழலுக்குள்ளோ இழுக்கப் பட்டுச் சிக்கிக் கொள்ளும். 2½—3½ வயதுக் குழந்தைகளிடம் அவ்வித வேற்றுப் பொருள் திடீரெனச் சுவாசப் பாதையில் சென்றடையக் கூடும். ஆனால், குழந்தைகள் அச்சத்தின் காரணமாக, இதைப் பெற்றோரிடம் சொல்வதில்லை.
அறிகுறிகள். குரல் வளையில் வேற்றுப் பொருள் சிக்கினால், மூச்சுத் திணறலும் குரல் கரகரப்பும் இருக்கும். பொருள் பெரிதாக இருந்தால், உடனே இறப்பு ஏற்படும். மூச்சுக் குழாயிலும், கிளைக் குழாயிலும், வேற்றுப் பொருள் இருந்தால், மூச்சுத் திணறல், இருமல், வியர்வை இவற்றோடு உடல் நீல நிறமாக மாறுவதுடன், அதிர்ச்சியால் நாடி தளர்ந்தும் விடும். சிறிய பொருள் மூச்சுக் கிளைக் குழாயில் ஓர் இடத்தில் தங்கி விடும் போது, இருமல் குறைந்து, ஓரளவு அமைதி காணப்படும். இதனால், அப்பொருள் வயிற்றினுள் சென்றிருக்கலாம் எனத் தவறாகக் கருதி, மருத்துவம் செய்யாமல் இருப்பதும் உண்டு.
கடலைப் பருப்பு, வேர்க் கடலை, புளியங் கொட்டை, விதை, பாக்கு, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துண்டு, முந்திரிப் பருப்பு விள்ளல் போன்றவற்றுடன் உணவுப் பொருள் அல்லாத குண்டு மணி, உலோகக் குண்டு, கல், ஊசி, ஊக்கு, பொத்தான், எழுது குச்சி ஆகியவையும் சுவாசப் பாதையில் காணப்படும் வேற்றுப் பொருள்கள் ஆகும்.அறிகுறி. உலோகப் பொருள் மூச்சுக் குழாயில் இருந்தால், முதலில் இருமல் இருக்கும். சிறிதாக இருந்தால், சுவாசிப்பதில் கடினம் இருக்காது. பொருள் சென்று, நீண்ட நாள் ஆகியிருந்தால், இருமலில் சளியுடன் குருதியும் வரலாம். உணவுப் பொருள், விதை போன்றவை மூச்சுக் குழாயை முதலில் முழுதும் அடைக்கா. சுவாசிக்கும் போது, காற்று உள்ளே சென்று வருவதில், கடினம் இருக்கும். சில சமயம், மூச்சுக் குழாய் அல்லது கிளைக் குழாய் சுருங்கி, காற்று வெளியேற வழியில்லாமல் அடைத்து விடுகிறது. இதனால், உள்ளே சென்ற காற்று துரையீரலிலிருந்து வெளியேற முடியாமல், நுரையீரல் பலூன் போல் விரிந்து விடுகிறது.
மூச்சுக் கிளைக் குழாய் முழுதும் அடைப்பட்டிருந்தால், காற்று நுரையீரலுக்குள் செல்ல முடியாமல், நுரையீரல் சுருங்கி விடுகிறது. நாளடைவில் நுரையீரலில் சீழ் பிடித்து இருமல், காய்ச்சல் முதலியன வரும்.
அறுதியிடல். உலோகப் பொருள் இருப்பதை எக்ஸ் கதிர்ப் படத்தில் எளிதாகக் கண்டு கொள்ளலாம். விதை அல்லது உணவுப் பொருள் இருப்பதை எக்ஸ் கதிர்ப் படத்தில் காண முடியாது. ஆனால், துரையீரல் அடைபட்டிருப்பதைக் கொண்டு ஊகித்து அறியலாம். தெளிவாகக் கண்டறிய, மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரு படமும், வெளியே விடும் போது ஒரு படமும் எடுக்க வேண்டும். வேற்றுப் பொருள் கிளைக் குழாய் முழுதும் அடைக்காமல் காற்று உள்ளே அடைப்பதாக இருந்தால், முதல் படத்தில் உதர விதானம் கீழே இறங்கிய நிலையில் இருக்கும். இதயமும் நடு நெஞ்சும் எதிர்ப் பக்கம் தள்ளப்பட்டிருக்கும். நுரையீரல் கறுப்பாகத் தோன்றும். இரண்டாம் படத்தில் உதர விதானம் மேலே செல்லாமல், முன்பு இருந்த இடத்திலேயே இருக்கும். (அடைபடாத பக்கம் உதர விதானம் மேலே செல்லும்). இதயமும், நெஞ்சும் அதிகமாக எதிர்ப் பக்கம் தள்ளப் பட்டிருக்கும்.
உணவுப் பொருள் கிளைக் குழாயை முழுதும் அடைத்திருந்தால், அப்பக்க நுரையீரல், காற்றுச் செல்லாமையால் சுருங்கி இருப்பது தெரியும். நெஞ்செலும்புகள் நெருங்கி இருக்கும். இதயம் அதே பக்கம் இழுக்கப்பட்டிருக்கும். நலமுடன் இருந்த குழந்தை திடீரென்று இடைவிடாது இருமி, ஏங்கி, மூச்சுத் திணறினால், ஏதாவது வேற்றுப் பொருள் மூச்சுக் குழாயுள் புகுந்திருக்கும் என்று கருத வேண்டும்,
மருத்துவம். சுவாசப் பாதையில் வேற்றுப் பொருள் இருக்கும் ஐயமேற்பட்டால், உடனே, பொது மயக்கம் கொடுத்து, கிளைக் குழாய் அக நோக்கிமூலம் அப்பொருளைக் கண்ணால் பார்த்து, உரியகருவியால் வெளியே எடுக்க வேண்டும். குழந்தைகளைத் தனியாக விளையாட விடக் கூடாது. விளையாடும் இடங்களில், சிறு பொருள்கள் இல்லாதவாறு கவனித்து வர வேண்டும். வாயில் பொருள்களை வைத்துக் கொண்டு ஓடி ஆடுவதும், சிரிப்பதும், அழுவதும் கூடாது என அறிவுறுத்த வேண்டும். குழந்தையின் உணவில், விதை, துருவல், குச்சி போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை உண்ணும் போது, அதன் கவனம் வேறு பக்கம் திரும்பும் வண்ணம் எதுவும் செய்யக் கூடாது. விளையாட்டு மைதானத்தில் இருக்கும் போது, புல், பூ, காம்பு ஆகியவற்றை வாயில் வைக்க விடக் கூடாது.
முதல் உதவியாக, குழந்தையைத் தலை கீழாகப் பிடித்து, மார்பில் தட்டி, தொண்டையில் விரல் விட்டுக் கவனமாக வேற்றுப் பொருளை எடுக்க முயலலாம். பெரியவர்களானால், ஹெம்லாக் முறைப்படி முயலலாம். அவர்களைப் படுக்க வைத்து, மூச்சை அடக்கச் சொல்லி, மார்பையும், வயிற்றையும் பலமாக அழுத்த வேண்டும். அப்போது சுவாசப் பாதையிலிருந்து வேற்றுப் பொருள் வெளியேற வாய்ப்புண்டு. —டி.எம். பரமேஸ்வரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 536)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wz966uky/
தமிழ்“சுவாசப் பாதையில் வேற்றுப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wz966uky/APA
Oliyon Research. (2026). சுவாசப் பாதையில் வேற்றுப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wz966uky/MLA
"சுவாசப் பாதையில் வேற்றுப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wz966uky/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment