அவிரோத உந்தியார்
avirōta untiyār
அவிரோத உந்தியார் என்பது, கோயமுத்தூரை அடுத்துள்ள பேரூரில் விளங்கும் வீரசைவ ஆதீனத்தின் முதற் குருமூர்த்தியாக விளங்கிய தவத் திரு சாந்தலிங்க சுவாமிகளால் இயற்றப் பெற்ற நூலாகும்.
அவிரோத உந்தியார் என்பது, கோயமுத்தூரை அடுத்துள்ள பேரூரில் விளங்கும் வீரசைவ ஆதீனத்தின் முதற் குருமூர்த்தியாக விளங்கிய தவத் திரு சாந்தலிங்க சுவாமிகளால் இயற்றப் பெற்ற நூலாகும். அவிரோதம் என்பது மாறுபாடில்லாமையை (பட்சபாதமில்லாமையை) உணர்த்தும். எந்நெறியாளர்க்கும் எவ்வகையானும் மாறுபாடு (விரோதம்) இல்லாதவாறு முத்திநெறி காட்டும் ஞானநூல் இதுவாகும். திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருவுந்தியாரையும், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியாரையும் போல இந்நூல் கலித்தாழிசைகளால் அமைந்துள்ளது. 100 கலித்தாழிசை கொண்ட இந்நூலிற்கு மதுரைச் சிதம்பர சுவாமிகள் சிறந்த உரை வரைந்துள்ளார்.
‘ஒன்றோடொன்று மாறுபட்டு விளங்கும் சமய நூல்களுள் இந்த நூல் ஒன்றாகாது; அதனால் இது அவிரோத உந்தியார் எனப் பெயர் பெறும்’ என்பதனை நூலாசிரியர் ‘தவிரா விரோத சமய நூலன்றால்; அவிரோத உந்தியாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘எம்மதத்தோர் எவ்வகை நிட்டை சொல்லினும், சம்மதமே எமக்கு உந்தீபற, தற்போதம் மாய்க்கு மேல் உந்தீபற’ (66) என்னும் தாழிசை, நன்னெறி காட்டுவதாக அமைந்ததால் எந்நெறியாயினும் ஏற்கத்தக்கதே எனக் கருதும் இந்நூலாசிரியரின் அவிரோத நாட்டத்தினை நன்கு புலப்படுத்துகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 906)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wx5j3grc/
தமிழ்“அவிரோத உந்தியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wx5j3grc/APA
Oliyon Research. (2026). அவிரோத உந்தியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wx5j3grc/MLA
"அவிரோத உந்தியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wx5j3grc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment