அமோகவருசர், முதலாம்
amōkavarucar, mutalām
இராட்டிரகூட அரசர்களும் ஒருவர், இவர் தந்தையார் மூன்றாம் கோவிந்தர், கி.பி.
இராட்டிரகூட அரசர்களும் ஒருவர், இவர் தந்தையார் மூன்றாம் கோவிந்தர், கி.பி. 814–ஆம் ஆண்டில் இறந்ததும் அமோகவருசர் பட்டம் ஏற்றார். அப்பொழுது இவர் இளம்பருவத்தினராக இருந்தார். அரசு கட்டில் ஏறிய போது நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவியது. சீரூர்ப் பட்டயத்தின்படி, கி.பி. 821–ஆம் ஆண்டில் அமோகவருசர் வேங்கி நாட்டை வெற்றி கண்டார். பின்னர், இவர் அங்கம், வங்கம், மகதம் போன்ற நாடுகளைக் கைப்பற்றித் தம் செல்வாக்கினைப் பெருக்கினார் என்பது சிலர் கருத்தாகும். அது உண்மையன்று; வெறும் தற்புகழ்ச்சிச் சொற்களேயன்றி அதற்கெல்லாம் தக்க ஆதாரமில்லை என்பது பிறிதொரு கருத்தாகும். அமோகவருசர் சமணக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார் என்பதை அவர் பின்பற்றிய சியாத்வாதக் கோட்பாட்டின் மூலம் அறி- யலாம். அமோகவருசர் தம் இறுதிநாட்களைச் சமயச் சிந்தனைகளில் செலுத்தினார். மான்ய கேடா (இக்காலத்தில் அதை மால்கேட் என்பர்) அவரது தலைநகரமாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 540)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wt3quwjq/
தமிழ்“அமோகவருசர், முதலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt3quwjq/APA
Oliyon Research. (2026). அமோகவருசர், முதலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wt3quwjq/MLA
"அமோகவருசர், முதலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/wt3quwjq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment