கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராட்டிய மன்னரின் கீழ் அரசியல் அலுவல் புரிந்தவர்; மராட்டிய வகுப்பினைச் சேர்ந்த அறிஞர். இவர் தமிழ், வடமொழி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். மன்னரின் கீழ் அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த இவர் கவிதை நூல் இயற்றும் கவிஞராகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது. பக்தலீலாமிருதம் என்பது இவர் இயற்றிய நூல். இது மராத்தி மொழியில் அமைந்த வடநாட்டுப் பக்தர்களின் வரலாற்றைச் செய்யுளில் விளக்கும் நூலாகும். இதன்கண் விளக்கப் பெற்றுள்ள பக்தர்களுள் சயதேவர், புண்டலீகர் முதலியோர் அடங்குவர். தி.வி. கோவிந்தபிள்ளை இந்நூலைத் தஞ்சையில் பதிப்பித்து வெளியிட்டார்.