அக்குரோணி என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர்களும் கொண்ட படைப்பிரிவு ஓர் அக்குரோணி எனப்படும். இவ்வெண்ணிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது. த.கோ.