{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/we7qabzm/", "data": {"id": "we7qabzm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/we7qabzm/", "kind": "article", "headword": "அக்குரோணி", "romanization": "akkurōṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.552450+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அக்குரோணி என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு.", "body_ta": "அக்குரோணி என்பது பாரத இராமாயணக் காப்பியங்களில் குறிக்கப்படும் ஒரு படையளவு. 21,780 தேர்களும் 21,780 யானைகளும், 68,610 குதிரைகளும், 1,09,350 வீரர்களும் கொண்ட படைப்பிரிவு ஓர் அக்குரோணி எனப்படும். இவ்வெண்ணிக்கை நிகண்டுகளில் வெவ்வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது. த.கோ."}}