இன ஒதுக்கீடு என்ற இனவெறிக் கொள்கை வெள்ளையரால் தென் ஆப்பிரிக்காவில் குறிப்பாக நமிபியாவில் பின்பற்றப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவை இன ஒதுக்கீட்டைத் (Apartheid) தடுக்கவும் இதைப் பின்பற்றுவோரைத் தண்டிக்கவும் ஆவன செய்கிறது. எனினும், 1983 வரை கண்டிப்பது அல்லது கண்டனம் செய்வது மட்டுமே நடந்து வருகிறது. இதன்படி நாட்டின் எல்லா நில உரிமைகளும் வெள்ளையருக்கே, காற்பங்கு மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் கறுப்பருக்கு அளிக்கப்படும். அவர்கள் நாகரிகமடைந்த நகரங்களுக்கு வெள்ளையருக்குப் பணி செய்ய மட்டுமே வரலாம், இருக்கலாம். வேலை ஊதியம், வசிக்கும் வீடு, உண்ணும் உணவு, உடுக்கும் உடை முதலியவை இன்னும் வெள்ளையரால்தான் வரையறுக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கர்களை வெள்ளையர் காவல்துறையினர் தம் விருப்பம் போல் சவுக்கால் அடிப்பது, சிறை செய்வது, நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் சிறையில் நெடுநாள் வைத்திருப்பது, ஐயத்திற்குரியவர்களைக் கைது செய்வது, அவர்களைச் சிறையில் கொடுமைப்படுத்திக் கொன்றுவிடுவது முதலியவை சாதாரணமாக நடைபெறுகின்றன. பள்ளிச் சிறார்கள் கூட வெள்ளையர் காவல்துறையினரால் விருப்பம்போல் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். இந்த நிலையை மாற்ற ‘இவாப்போ’ (Iwapo) தன்னால் இயன்ற செயல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால், இந்த இயக்கத்தின் சிறந்த தலைவரான நெல்சன் மண்டெலா ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுவிட்டார். ஆயினும் இவ்வியக்கம் அங்கோலா, மொசாம்பிக்கு, சிம்பாப்வே வரை பரவியுள்ளது. இட்லரின் தேசியமான ஆரிய இன மேம்பாட்டுக் கொள்கைதான் இனவேறுபாட்டுணர்ச்சியை (Racism) ஒரு வெறியாக மாற்றியது, யூத (Jews) இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்; சிறைகளில் அடைக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாயினர். இன வேறுபாட்டுணர்ச்சியுடன் குடியாட்சிக் கொள்கையும் வளர்ந்து வந்தது வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும். நீக்கிரோ என்பவர் யார் என்ற கேள்விக்குக் குழப்பமான எண்ணமும் கருத்துவேறுபாடுமே இன்றும் நிலவுகிறது. நூல்களில் சொல்லப்பட்டுள்ளபடி நீக்கிரோக்கள் இன்று உலகில் இல்லை. எவ்வாறு வெள்ளையர்களின் நிறம், அளவு, முக அமைப்பு போன்றவற்றை அறுதியிட்டுச் சொல்ல முடியாதோ, எவ்வாறு மஞ்சள் இன மனிதர் எத்தகைய முகக் குறிகளுடையவர் என்று சொல்ல முடியாதோ, அவ்வாறே நீக்கிரோக்கள் யார் என்பதையும் அவர் முக இலக்கணம் இன்னது என்பதையும் சொல்ல முடியாது. மனித இனம் என்பதற்கு அறிவியல்முறையில் இலக்கணம் இன்று கிடையாது. எவ்வாறு மனித இனம் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி வளர்ந்து, பிற இனங்களோடு எவ்வகையில் எந்த அளவிற்குக் கலந்துவிட்டது என்பதை வரலாற்றுத்துறையால் அறியலாம். அதே முறையில் நீக்கிரோக்கள் என்பவர் கறுப்பாகவும் சுருட்டை முடியை உடையவராகவும் பருத்த உதடுகள், உருண்டை மூக்கு, சப்பை மண்டை முதலிய அமைப்புகளுடையவராகவும் இருப்பர் என்னும் அறியலாம். பெரும்பாலும் இவர்களை ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணலாம். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மனிதன் தெற்கு ஆசியாவிலிருந்து இரண்டு திசைகளில் பிரிந்து சென்றபோது, நீளமான தலையுடன் நீண்ட பரட்டை முடியுடன் கூடியவனாகத் தெற்கே ஆப்பிரிக்காவில் சென்று சேர்ந்தான். வடக்கே சென்ற நீண்டமுடியையும் பெரிய தலையையும் உடையவன் கிழக்கு ஆசியாவில் சென்று குடியேறினான். நீக்கிரோக்கள் தலைசிறந்த போர்வீரர்களாசு, படைப்பவர்களாகப் பல வரலாறு நூற்றாண்டுகளாக விளங்கினார்கள். பல நாடுகளின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் ஊடுருவலைத் தாங்கி, அதனால் பெரிதும் பாதிக்கப்படாமல் விளங்கினார்கள். ஆப்பிரிக்காவில் இருதய நோய் கி.பி. 15–ஆம் நூற்றாண்டில்தான் மிகத் தீவிரமாகப் பரவத் தொடங்கியது. பண்டைக் காலத்திய எகிப்தியப் பேரரசர்கள் கூட நீக்கிரோ இனத்தவர்களாய் இருந்ததுண்டு. இசுலாமியர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கை காரணமாகவே அடிமைகள் பல நாடுகளில் உருவாயினர். ஆப்பிரிக்காவும் இதற்கு விலக்கன்று. இசுலாமியர்களால் உருவாக்கப்பட்ட பெரும்பான்மையான அடிமைகள் ஆசியாவிலும் அமெரிக்காலும் வாழ்ந்த மக்களேயாவர். இதிலிருந்து சமய வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகள் காரணமாக அடிமைத்தளை உருவானதேயன்றி, இனவேறுபாடு காரணமாக உருவாகவில்லை என்பதை உணரலாம். ஆப்பிரிக்காவின் தனிப் பண்பாடுகள் குடும்பம், சிறு இனம், சிறு நகரங்கள் ஆகியவையே. தேசியம், தேசிய அரசு என்பவை உருவாகியிருந்திருந்தால் அடிமைகள் உருவாவது தடுக்கப்பட்டிருக்கும். எத்தியோப்பியாவில் தோன்றிய தேசிய அரசு உருவாவதற்கான முயற்சிகள் பாண்டூக்களால் முறியடிக்கப்பட்டன. இதேபோலத் தென்கிழக்கிலும் முறியடிக்கப்பட்டது. கினியாவிலும் யோடூபோவிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுக் காங்கோ வரை சென்றது. அது பாண்டூக்களால் அழிக்கப்பட்டது. வடக்கிலும் வடமேற்கிலும் சூடானியப் பட்டாளம் இசுலாமியப் பேரரசு என்ற கொள்கையைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தது. இந்தத் தீவிரமே ‘தேசிய அரசு’ முயற்சிகளை அழித்துவிட்டது. மேற்குச் சூடானில் பேரரசு நிறுவப்பட்டது. ஆனால் இரண்டு சூழ்நிலைகள் இதற்கு எதிராக இருந்தன. ஒன்று, சமயப் பற்றில்லாத தென்பகுதியார் தொடுத்த இடையிடாத போரும் நீக்கிரோக்கள் அடிமைகளாக விற்கப்பட்டு வந்ததும் ஆகும், மற்றொன்று, ஆப்பிரிக்க வணிகம் நெடுங்காலமாக வடக்குத் திசை வழியே மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆகும். மூர்கள் என்னும் இனத்தவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இவ்வணிகத்தைத் தடுத்துவிட்டனர். இதனால் நீக்கிரோப் பேரரசுகள் உட்பூசலில் ஈடுபட்டுப் பாதிக்கப்பட்டன. தென்மேற்கிலிருந்து ஐரோப்பிய அடிமை வணிகர்கள் மிகுதியானவர்கள் வந்து அடிமை வணிகத்தை மேலும் தீவிரப்படுத்தினார்கள். அவர்களுக்கும் ஆப்பிரிக்க ஆசிய இசுலாமியர்களுக்கும் ஏற்பட்ட போட்டியால் நீக்கிரோக்கள் என்னும் இனத்தார்கள் மிக அதிகமாக விலை கூறப்பட்ட மனிதப் பொருள்களாக ஆயினர். இதனால், பழங்கால நீக்கிரோப் பண்பாடுகள் அழிந்துபட்டன. இதனோடு சேர்ந்து ஐரோப்பிய நாட்டினர் இக்கண்டத்தைத் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, நீக்கிரோக்களை வெள்ளையரின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்த, அவர்களை மேலை நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கா கண்டத்தைப் புதிய மேலை நாடாக்கித் தத்தம் மேல் உரிமைகளை நிலைநிறுத்துவதில் ஈடுபட்டன. நியாசா ஏரிக்கு வடக்கேயுள்ள நாடுகளில் மட்டும் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நீக்கிரோ இனம் தழைத்து வளர்ந்து வந்தது. பல ஊடுருவல்களுக்குப் பிறகும் தழைத்த இந்தீக்கிரோவினத்தைக் கொண்ட உகாண்டா ஒரு செழுமையுள்ள நாடாக இருந்தது. இந்த இலாபாண்டு இனம் மட்டும் அழியாமல் ஐரோப்பியர்களால் அடிமைப்படுத்தப்படாமல், சுதந்திரமாகத் தனித்தன்மையோடு வாழ்ந்து வந்தது. நீக்கிரோக்களில் புதர் மனிதர்கள், பிக்மிக்கள், எடென்டாட்டுகள், சூலுக்கள், காபீர்கள், மூர்கள், பெர்பெர்கள் என்று பல சாதியினர் இருந்த போதிலும் அனைவரும் ஆப்பிரிக்கர்களே. ஒப்பீடு இன ஆராய்ச்சி அதன் ‘மனித வரலாற்றில்’ ஆப்பிரிக்க இனம் மிகக் கீழ்ப்படியில்–மிருக வடிவிலிருந்து–மனித வடிவிற்குச் சென்ற நிலையாகும் என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறது. நீக்கிரோக்களுக்கு மூளை மிகவும் சிறியது என்ற கருத்திற்கும் ஆதாரம் இல்லை. முதல் ‘இனக் காங்கிரசின்’ செயலாளர் கூறியதுபோல், நடுநிலையாளனான ஆராய்ச்சியாளன் உலகிலுள்ள எல்லா இன மக்களும் அறிவில், உழைப்பில், கொள்கையில், உடல் அமைப்பில் மாறுபாடுகள் உடையவராயினும் சமமானவரே என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் இந்த நிற வேறுபாடு உண்டானதன் மூலக் காரணங்கள் அடிமை வணிகமும் நீக்கிரோக்களின் அடிமைத்தளையும் ஆம். நிறம் அடிமைக்கு ஓர் அடையாளச் சின்னமாகாது. எனவே, ஆப்பிரிக்காவில் நீக்கிரோக்களுக்கு இழைக்கப்படும் கொடுகள் இன வெறியர்களால்–வெள்ளையர்களால் இழைக்கப்படும் கொடுமைகளாகும். நீக்கிரோக்களுக்கு என்று தனி இருப்பிடம், பள்ளிகள், உணவகங்கள், கூலிகள் என வெள்ளையர்- களால் ஏற்படுத்தப்பட்டுள்ளவை உண்மையில் நீதிக்குப் புறம்பானவையேயாகும். வெள்ளை இனத்தவர் கறுப்பர்களைக் கொடுமைப்படுத்தும் அவலமான நிலையில், ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட ஓரிரண்டு நீக்கிரோ அரசுகளும் தகுதியற்ற அரசு அலுவலர், பொருள் விரயம் ஆகியவற்றால் வெற்றியாகச் செயற்படவில்லை. வெள்ளையர் அரசோச்சும் தென் ஆப்பிரிக்காவில் நீக்கிரோ மக்கள் நிலை மிக இரங்கத்தக்கது. உலக மக்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்புகளினால் இக்கொடுமைகள் ஏட்டளவில் நின்றுவிட்டனவேயன்றிச் செயலளவில் இன்னும் நிற்கவில்லை. மொத்த 15,00,00,000 நீக்கிரோக்களுள் 12,10,00,000 பேர்கள் ஆப்பிரிக்காலிலும், 2,70,00,000 பேர்கள் புதிய உலகத்திலும் 20,00,000 பேர்கள் ஆசியாவிலும் வாழ்கிறார்கள். இனவேறுபாட்டுணர்வு மாறப் பிரைசு பிரபு கூறுவது ஒன்றே சரியானது. தென் அமெரிக்காவில் இசுபானியர்கள் இந்தியக் குடிகளோடு திருமணங்கள் மூலம் கலந்துவிட்டனர். போர்த்துகீசியர்கள் இந்தியக் குடிமக்களோடு மட்டுமல்லாமல் உடலமைப்பு மாறுபட்ட நீக்கிரோக்களுடனும் திருமண உறவு கொண்டுள்ளனர். இதுவே இன வேற்றுமையுணர்ச்சி மறையவும் இன ஒற்றுமையை வலுப்படுத்தவும் வழிகோலும் என்பது திண்ணம். அ.சி.