வடசெமிட்டிக் இனத்தைச் சேர்ந்த மொழியின் எழுத்து முறையாகும். அராமிய மொழி கிறித்து பிறப்பதற்குப் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மேலை ஆசியாவில் பழக்கத்தில் இருந்துவந்த தொன்மையான மொழியாகும். இம்மொழி, தொன்மைச் சிறப்பு மிக்க மெசபடோமியா, சிரியா போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்டு வந்தது. அராமிக் வகை எழுத்துகள் உள்ள கல்வெட்டுகள் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. குறிப்பாக, இக்கல்வெட்டுகள் நடு ஆசியா, குர்திசுத்தான், காக்கசசுப் பகுதி, ஊரல் மலைத் தொடருக்குத் தென்பகுதி, ஆப்கானிசுத்தானம், எகிப்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. சார் இ–கூன், தட்சசீலம் ஆகிய இடங்களில் உள்ள அசோகரின் கல்வெட்டுகள் அராமிய எழுத்துகளைக் கொண்டுள்ளன.