ஐரோப்பாவின் வடகோடியில் ஆர்டிக்கு வட்டத்திற்கு மேலே அமைந்துள்ள நிலப்பகுதி. இலாப்புகள் (Lappas) என்னும் மக்களின் தாயகமாகையால் இது இலாப்லாந்து (Lapland) என்னும் பெயர் பெற்றது. இலாப்பின மக்கள் குள்ள- மாகவும் உடலுறுதி மிக்கவர்களாகவும் விளங்குகிறார்கள். இவர்களின் உயரம் சராசரி 150 செ.மீ. இலாப்லாந்து தனித்ததொரு நாடாகக் கருதப்படுவதில்லை. நார்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா போன்ற நாடுகள் இதனைப் பகிர்ந்துகொண்டுள்ளன. இலாப்லாந்து குளிர் மிகுந்த பகுதியாகும். இங்கு ஆண்டொன்றில் ஒன்பது மாதங்கள் குளிர் காலம்; எஞ்சிய மூன்று மாதங்கள் கோடைக்காலம். எனவே, மிதமான குளிர் இருக்கும். வடகோடியில் அமைந்துள்ள பகுதியாகையால், இலாப்லாந்தில் கோடைக் காலத்தின் இருமாதங்களில் இரவு ஏற்படுவதேயில்லை, குளிர்காலத்தில் இரு மாதங்களுக்குச் சூரியன் அடிவானத்திற்குமேல் கிளம்புவதில்லை. அமைவிடமும் பரப்பளவும் இலாப்லாந்தின் பரப்பளவு 3,88,000 ச.கி.மீ. வடநார்வேயின் முழுப்பகுதி, சுவீடனின் நார்பாட்டன் மாநிலம் நார்லாந்தின் ஒரு பகுதி, வட பின்லாந்தின் முழுப்பகுதி, உருசியாவிற்குச் சொந்தமான கோலா தீபகற்பம் ஆகியவை இப்பகுதியில் அடங்கும். இலாப்லாந்தின் தென்பாகத்திற்குத் திட்டவட்டமான எல்லை கிடையாது. நார்வீசியக் கடல், பாரண்டுசுக்கடல், வெண்கடல் போன்றவை இதன் வடக்கில் அமைந்துள்ளன. இலாப்லாந்து நிலம் இலாப்லாந்து வறண்ட பகுதியாகும். இங்கு மரங்கள் மிகக் குறைவு. தென்படும் மரங்கள் மெல்லியவை; பயிர்பச்சைகள் தடைப்பட்ட வளர்ச்சியுடையவை; மரங்களுள் பிர்ச்சு, பைன், பர் போன்றவை எப்படியோ பிழைத்துள்ளன. குளிரான தட்பவெப்பத்தால் மரங்கள் குட்டையாகவே வளருகின்றன. கலைமான்கள் இங்குத் தென்படும் ஒரு சில பயிர்பச்சைகளைத் தின்று உயிர்வாழ்கின்றன. கலைமான்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றை வேட்டையாடுவோரும் உண்டு. கலைமான்கள் உணவுக்கும் பயன்படுகின்றன. இலாப்லாந்தில் இரும்பு, நிக்கல் போன்ற தாதுப் பொருள்கள் அடிப்படை உலோகங்களாகும். இரும்பு, சுவீடிய இலாப்லாந்திலும், நிக்கல் உருசியாப் பகுதியிலும் படிந்துள்ளன. மக்கள் இலாப்லாந்தியரின் எண்ணிக்கை 34,000. இவர்களுள் 2500 பேர் பின்லாந்திலும், 10,000 பேர் சுவீடனிலும், 20,000 பேர் நார்வேயிலும், 1500 பேர் உருசியாவிலும் வாழ்கிறார்கள். ஐரோப்பாவில் வாழும் மக்களுள் இலாப்பிய மக்களே மிகச் சிறுபான்மையினராவர். இவர்கள் சீனர்களைப் போலவும், சப்பானியரைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள். இவர்கள் குறுகிய நெற்றியையும், நீண்ட தாடை எலும்புகளையும், நீண்ட கரிய முடியையும், சற்றேறக்குறைய மஞ்சள் நிறத்தையும் கொண்டவர்கள். இவர்கள் பரந்து தட்டையான மூக்கையும், நேரான மெல்லிய உதடுகளையும் கொண்டவர்கள். இவர்களுள் பலர் சுவீடிய, பின்னிய (Finns), நார்வேயப் பெண்களை மணம்புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால், இவர்கள் உடற் கூறு மாறுபட்டு வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நாடோடிகள். இவர்கள் கலைமான் கூட்டங்களை வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்து வருகிறார்கள். விலங்கு மயிராலும் கலைமான் தோல்களாலுமான துணிகளை ஆடையாக உடுத்துகிறார்கள். மொழி இலாப்லாந்தியரின் மொழி பின்லாந்தில் பேசப்படும் மொழியுடன் தொடர்பு கொண்டது. இலாப்லாந்தின் பல பகுதிகளில் வாழும் இவர்கள் பல்வேறு பேச்சுமொழிகளில் பேசுவர். இவர்களுள் பலர் கல்வி அறிவில்லாதவர்கள். சமயம் சமானியம் என்னும் செப்பிடு வித்தையை அண்மைக்காலம் வரை அனைத்து இலாப்பியரும் நம்பிவந்தனர். சமான் (Shaman) என்பது ‘மருத்துவ மனிதன்’ எனப்பொருள்படும். அம்மருத்துவ மனிதர்கள் தப்பட்டையொலியெழுப்பி வருங்காலத்தை முன்கூட்டியே அறிவிக்கிறார்கள். இக்காலத்தில் இவர்களுள் பெரும்பாலோர் கிறித்தவச் சமயத்தைப் பின்பற்றி உலூதரின் கோட்பாடு- இலாப்லாந்துக் கலைமான் பொருள்களை இழுத்துச் செல்லல் களையோ கீழ்த்திசை வைதிகத் திருச்சபைக் கோட்பாடுகளையோ பின்பற்றுகிறார்கள். திருமணத்தின் போதும் இறந்தவர்களைப் புதைக்கும்போதும் எவ்வளவு தொலைவாயினும் அதனைப் பொருட்படுத்தாமல் இருச்சபைகளுக்குச் செல்கின்றனர். உண்ணும் உணவைப் பெறும் அடிப்படையில் இவர்களை மலைவாழ் இலாப்பியர், கடல்வாழ் இலாப்பியர், ஆறுவாழ் இலாப்பியர், காடுவாழ் இலாப்பியர் என நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். மலைவாழ் இலாப்பியர் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். கலைமான் மந்தைகளோடு இவர்கள் இடம்விட்டு இடம் பெயர்கிறார்கள், மந்தைகளுக்கு போதுமான பயிர்பச்சைகள் கிடைக்கும் இடங்களில் இவர்கள் தம் கூடாரங்களை அமைத்துக் கொள்கிறார்கள். கூம்பு வடிவான ஒரே கூடாரத்தில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வாழ்கிறார்கள். கலை மான்களின் இறைச்சி, பால், பாலாடைக்கட்டி போன்றவற்றை உண்டு உயிர்வாழ்கின்றனர். கடல்வாழ் இலாப்பியர் கடற்கரையை அடுத்துள்ள பகுதிகளில் குடிசைகளில் வாழ்கிறார்கள். இக்குடிசைகள் மரத்தாலானவை. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடித்தே வாழ்கிறார்கள். கடல்வாழ் இலாப்பியர் மலைவாழ் இலாப்பியர்களைவிட நாகரிக முதிர்ச்சி பெற்றவர்கள். கடல்வாழ் இலாப்பியர் கூட்டங்கூட்டமாகத் தம் குடிசைகளை அமைத்துக் கொண்டு மீன்பிடிக்கும் மரபினரைப் போல் வாழ்கின்றனர். ஆறுவாழ் இலாப்பியர் ஆற்றங்கரைகளில் தம் குடியிருப்புகளை அமைத்து வாழ்கின்றனர். இலாப்லாந்திலேயே இவர்கள்தாம் மிகுந்த முன்னேற்றமுற்ற மக்களாவர். இவர்கள் சமூகமாக இணைந்து வாழ்வதுடன், சிறிதளவு பண்ணைத் தொழிலையும் செய்கிறார்கள். ஆறுவாழ் இலாப்பியர் மீன்பிடித்தும், வேட்டையாடியும், கலைமான்கள், கால்நடைகள், ஆடுகள் போன்ற விலங்குகளை வளர்த்தும் வாழ்கிறார்கள். காடுவாழ் இலாப்பியர் நிலையான குடியேற்றங்களை அமைத்துக்கொண்டு கலைமான், கால்நடை போன்றவற்றை வளர்த்து வாழ்கிறார்கள். வரலாறு இலாப்பிய இனமக்கள் நடு ஆசியாவிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ச் சென்றிருக்க வேண்டுமென்பது மானிடவியலாரின் நம்பிக்கையாகும். பின்லாந்து வணிகர்கள் கி.பி. 14–ஆம் நூற்றாண்டளவில் இலாப்பியர்களுடன் வாணிகம் செய்தார்கள். சுவீடிய அரசர்கள் கி.பி. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் இலாப்பிய அரசர்களாகக் கருதப்பட்டார்கள். எனினும், இவர்கள் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இவர்களிடம் சமூகக் கட்டுக்கோப்போ அரசாங்கக் கட்டுப்பாடோ இல்லை.