ஒப்பு நிலைசுட்டுச்சாதனம்

oppu nilaicuṭṭuccātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து அமைவதில்லை. சாதனத்தின் நகர்வுகளைப் பொறுத்தே அமைகிறது. எடுத்துக்காட்டாக, சுட்டியைத் திண்டின்மீது ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் தூக்கி வைத்தோமானால் திரையில் காட்டி நகர்வதில்லை. ஆனால், திண்டின்மீது உராயுமாறு சுட்டியைச் சிறிதளவு நகர்த்தினால் போதும் திரையிலுள்ள காட்டியும் நகரும். இவ்வகைச் சுட்டுச் சாதனங்கள், முற்றுநிலை (Absolute) சுட்டுச் சாதனங்களிலிருந்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக வரைகலைப் பலகை (Graphics Tablets) யில் குறிப்பிட்ட பரப்புக்குள் சுட்டுச்சாதனம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கேற்ப திரையிலுள்ள காட்டியின் இருப்பிடமும் அமைகிறது. — relative pointing device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1240)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4zgvvat/

தமிழ்
“ஒப்பு நிலைசுட்டுச்சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4zgvvat/
APA
Oliyon Research. (2026). ஒப்பு நிலைசுட்டுச்சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w4zgvvat/
MLA
"ஒப்பு நிலைசுட்டுச்சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4zgvvat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment