தட்சிக், உசக் ஆகிய இருமொழி எழுத்தாளர், ஒரு கவிஞருமாவார். கைவினைஞரின் மகனான இவர், தம் 11–ஆம் வயதில் பெற்றோரை இழந்தார். இசுலாமிய சமயப் பள்ளியில் பயிலத் தெருப் பெருக்கல், மூட்டை தூக்குதல் முதலிய பல வேலைகளைச் செய்தார். இவர் தம் 18–ஆம் வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். விழாக்களும் சந்தைகளும் இவரைக் கவிஞராக்கின. சார் மன்னர் ஆட்சியில் நிலவிய நிலமானிய ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். 1905–இல் புக்காராவில் புதிய கல்வி முறையைப் பின்பற்றிக் கல்வித் துறைத் தலைவரானார். சமயவாணரின் எதிர்ப்புக்கிடையே எழுத்தறிவற்ற சிறுவர்கட்கு மறைமுகமாகக் கல்வி கற்பித்தார். 1917–இல் இவரைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தனர். பின்னர்ப் புரட்சியாளர் இவரை விடுதலை செய்தனர். கவிஞரான அயினி சிறந்த உரைநடையாளருமாவார். உசுபெக் கலைக்களஞ்சியமாக விளங்கிப் பல நூல்களை எழுதினார். ஆழ்ந்த அறிவுக் கருவூவங்களாகத் திகழும் இவர்தம் படைப்புகள் 36 மொழிகளில் வெளிவந்துள்ளன. 1980–க்குள்ளாக 300 வெளியீடுகள் வந்துள்ளன.த.கோ.