வித்தியா தத்துவம்
vittiyā tattuvam
பொருள்கள் · Senses
1.
பெயர்: சிவன் அருளால் வழி நிற்கும் வித்தியேசுவரராகிய அனந்த தேவர் தொழிற்படுத்துவதால், இதற்கு இப்பெயர். தோற்றம்: அசுத்த மாயையிலிருந்து தோன்றுவது. காலம், நியதி, கலை ஆகிய மூன்றும் மாயையினின்று தோன்று பவை. காலத்துக்குப் பின் நியதி தோன்றும் நியதிக்குப் பின் தோன்றுவது வித்தை, கலையினின்று தோன்றுவது. வகை:தத்துவம் மூன்றில் ஒரு வகை. இதில் அடங்குவன; காலம், நியதி,கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என ஏழு இவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவமே. செலுத்துகை; சிவ தத்துவம் (நாதம்) மாயையினையும், சத்தி (விந்து) கால நியதிகளையும், சாதாக்கியம் புருடனையும், ஈசுவரம் அராகத்தையும், சுத்த வித்தை வித்தையினையும், செலுத்துவதால், உலக நுகர்ச்சியில் உயிர்கள் ஈடுபடமுடிகின்றது. காலம்: நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என மூவகை. இது தனக்குக் கீழுள்ள உலகத்தை எல்லாம் கால வரையறை செய்து தோற்றியும் நிலை நிறுத்தியும் அழித்தும் இறைவன் ஆணைப்படி நடத் துவிக்கும். நியதி: இது உயிர்களின் இரு வினைகளை அவரவர்களே நுகருமாறு ஒழுங்கு செய்யும். கலை: இது ஆணவத்தின் மறைப்பைச் சிறிது நீக்கி உயிர்களின் வினையாற்றலைத் தொழிலில் ஈடுபடுமாறு செய்கிறது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vyufu2s4/
தமிழ்“வித்தியா தத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyufu2s4/APA
Oliyon Research. (2026). வித்தியா தத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vyufu2s4/MLA
"வித்தியா தத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vyufu2s4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment