உரோமானிய ஆட்சியின்போது இங்கிலாந்தில் கி.பி. 140–ஆம் ஆண்டின் அந்தோனினசு பயசு (Antoninus Pius) என்பவரால் கட்டப் பெற்றது. அந்தோனினசு கட்டியதால் இப்பெயர் பெற்றது. இச்சுவர் மண்கட்டிகளால் கட்டப்பட்டது. இச்சுவரின் அழிவுச்சின்னங்கள் போர்த்துக் கழிமுகத்திலிருந்து கிளைடு (Clyde) ஆற்றுக் கழிமுகம் வரை நீண்டு செல்கின்றதை இன்றும் காணலாம்.