அகமெம்னன்
akamemṉaṉ
அகமெம்னன் முகமூடி
அகமெம்னன் முகமூடி
அகமெம்னன்,
திராய் (Troy) நகரை முற்றுகையிடப் புறப்பட்ட கிரேக்கப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர்; மைசினியாவின் புராண கால அரசர். போர் மூண்ட பத்தாம் ஆண்டில் அகமெம்னன் (Agamemnon) தம் மக்களின் விருப்பத்திற்கிணங்க, தாம் கைப்பற்றிய கிரைசீசு (Chryseis) என்பாளை அவள் தந்தையாரிடம் ஒப்படைத்தார். பழிக்குப் பழி வாங்க எண்ணிய அகமெம்னன், பிரிசீசு (Briseis) என்னும் மங்கையை அக்கிலீசுவிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். திராய் நகர் வீழ்ச்சியுற்ற பின், அகமெம்னன் ஆர்சுாசுக்குத் திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய அதே நாள், அவர் மனைவி கிளதம் நெசத்திராயும் (Clytemnestra) அவள் கள்ளக் காதல- னான ஏசித்தசு (Aegisthus) என்பவனும் இணைந்து சதிசெய்து, அகமெம்னனைக் கொன்றுவிட்டனர். அகமெம்னனின் மகன் ஓரத்தெசு (Orestes) அவர்கள் இருவரையும் கொன்று பழி தீர்த்துக் கொண்டான்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 103)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vtj2k773/
தமிழ்“அகமெம்னன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtj2k773/APA
Oliyon Research. (2026). அகமெம்னன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vtj2k773/MLA
"அகமெம்னன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vtj2k773/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment