{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vtj2k773/", "data": {"id": "vtj2k773", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vtj2k773/", "kind": "article", "headword": "அகமெம்னன்", "romanization": "akamemṉaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.128201+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகமெம்னன் முகமூடி", "body_ta": "அகமெம்னன் முகமூடி\n\nஅகமெம்னன்,\n\nதிராய் (Troy) நகரை முற்றுகையிடப் புறப்பட்ட கிரேக்கப் படையைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றவர்; மைசினியாவின் புராண கால அரசர். போர் மூண்ட பத்தாம் ஆண்டில் அகமெம்னன் (Agamemnon) தம் மக்களின் விருப்பத்திற்கிணங்க, தாம் கைப்பற்றிய கிரைசீசு (Chryseis) என்பாளை அவள் தந்தையாரிடம் ஒப்படைத்தார். பழிக்குப் பழி வாங்க எண்ணிய அகமெம்னன், பிரிசீசு (Briseis) என்னும் மங்கையை அக்கிலீசுவிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். திராய் நகர் வீழ்ச்சியுற்ற பின், அகமெம்னன் ஆர்சுாசுக்குத் திரும்பிச் சென்றார். வீடு திரும்பிய அதே நாள், அவர் மனைவி கிளதம் நெசத்திராயும் (Clytemnestra) அவள் கள்ளக் காதல- னான ஏசித்தசு (Aegisthus) என்பவனும் இணைந்து சதிசெய்து, அகமெம்னனைக் கொன்றுவிட்டனர். அகமெம்னனின் மகன் ஓரத்தெசு (Orestes) அவர்கள் இருவரையும் கொன்று பழி தீர்த்துக் கொண்டான்."}}