நடுவர்
naṭuvar
பொருள்கள் · Senses
1.
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
2.
ஒரு குறிப்பிட்டப் போட்டிக்கு முக்கிய பொறுப்பேற்று நடத்தும் பெரும் பொறுப்பினை வகிப்பவர் நடுவர் என்று அழைக்கப்படுகின்றார். அது ஓட்டப்பந்தயங்கள் அல்லது எறியும் நிகழ்ச்சிகள் அல்லது தாண்டும் நிகழ்ச்சிகள் என்பதில் ஒன்றாக அமையும். நிகழ்ச்சிநிரல்படியே சரியாக நிகழ்ச்சிகளை நடத்தவும் துணை நடுவர்கள் இடையில் கருத்து வேற்றுமை ஏற்படும் பொழுது சுமுகமாகத் தீர்த்து வைத்துத் தொடரவும், மைதானம் சரியில்லாத பொழுது அதற்கான முடிவு எடுக்கவும் போன்ற அதிகாரங்களைப் படைத்தவராக நடுவர் விளங்குகின்றார். இவரது கண்காணிப்பில், இவருக்குக் கீழ் உள்ள நிகழ்ச்சிகளுக்குரிய விதி முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதிகாரிகள் வழி நடத்தப்படுகின்றனர். நிகழ்ச்சிகள் தெளிவாக நடத்தப்படுகின்றன. 52. தொடரோட்டப் போட்டி (Relay Race) ஒரே குழுவைச் சேர்ந்த நான்கு ஒட்டக்காரர்கள், ஒரு குறிப்பிட்ட ஒட்ட தூரத்தை, ஒவ்வொருவரும் ஒரே அளவு குறிப்பிட்ட தூரத்தைக் கடப்பது போல் (உ.ம். 4X 100= 400 மீட்டர் ஓட்டம் என்பது போல) ஒவ்வொருவரும் ஒடிச் சென்று முடிப்பது தான் தொடரோட்டமாகும். அவ்வாறு, ஒடும் பொழுது, அதற்குச் சான்றாக, அவர்களின் கையில் உள்ள குறுந்தடி (Baton) ஒவ்வொருவருக்கும் மாற்றப்படுவது என்பது விதிக்குட்பட்ட முறையாகும். இவ்வாறு மாற்றப்படும் எல்லை 20 மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழே குறுந்தடியைத் தவறவிட்டவர், பிறர் உதவியின்றி, தானே போய் எடுத்துக் கொண்டு தான் ஓடவேண்டும். 53. ரிப்பன் (Rebbon) பட்டுத் துன்னித்துண்டு (Silk) ஒன்று போட்டிகளில் பரிசாக வழங்கப்படுவது பாரம்பரிய முறையாகத் தொடர்ந்து வருகிறது. பிறகு அது பதக்கங்களில் (Medals) கட்டப்பட்டு கொடுக்கும் மரபு ஏற்பட்டது. இவ்வாறு பதக்கத்துடன் தரும் பொழுது, நீல ரிப்பன் முதல் பரிசுக்கும், சிவப்பு ரிப்பன் இரண்டாம் பரிசுக்கும், வெள்ளை ரிப்பன் மூன்றாம் பரிசுக்கும் தரப்படுவது வரன் முறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
— Referee
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vjg6xs2k/
தமிழ்“நடுவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjg6xs2k/APA
Oliyon Research. (2026). நடுவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vjg6xs2k/MLA
"நடுவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vjg6xs2k/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment