நேர் திசை மின்னழுத்தத்தால் இயங்கும் ஓர் எந்திரம் நேர் மின்னோடி (d.c.motor)எனப் படும். எந்த ஒரு நேர் மின் எந்திரத்திலும், புலச் சுருளை, சுழலிச் சுருளை, திரட்டி எனும் எந்திரவியல் திருத்தி ஆகிய பகுதிகள் இடம் பெறும். பொதுவாக நிலைப் பகுதியில், காந்த இரும்புப் பொருள் நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் அமைந்திருக்கும். அதனைச் சுற்றி, புலச் சுருள்கள் அமைக்கப் பட்டிருக்கும். தேவையான எண்ணிக்கையில், வட மற்றும் தென் துருவங்களை உருவாக்கும் வகையில், இச்சுருளைகள் சுற்றப் பட்டிருக்கும். இவற்றின் வழியாக, நேர் மின்னோட்டம் பாய்வது இவற்றில் காந்தத் துருவத் தன்மையை உருவாக்கும். அதனால், சுற்றி வரும் காற்றிடை வெளியில் தேவையான காந்தப் பாயத்தை உருவாக்கும். சுழற்சிச் சுருளைகள் சுழல் பகுதியில் சுற்றப் பட்டிருக்கும். சுழல் பகுதி குறுந் தகடுகளாலான உள்ளகத்தைக் கொண்டது. அவற்றின் மேற்புறத்தில், சுருளைகளை வைப்பதற்காகத் தக்க இடைவெளிகள் இருக்கும். சுருளைகளின் இறுதிப் பகுதி ஒன்றோடொன்று மின் காப்புச் செய்யப் பட்ட மொத்தத்தில் உருளை வடிவைத் தரும் செப்புத் தகடுகளில் முடிவடையும். அவற்றில், தக்க இடங்களில் மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்றவாறு மின் தொடுகைகள் (brushes) உண்டு. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> மேற்கூறிய மூன்று இன்றியமையாப் பகுதிகள் அடங்கிய பல்வேறு வடிவமைப்புகள் கொண்ட மின்னோடிகள் உள்ளன. நேர் மின்னோடி மின்னாற்றலை எந்திரவியல் ஆற்றலாக மாற்றுகிறது. புலச் சுருளை, சுழலிச் சுருளையுடன் இணைக்கப் பட்டிருக்கும் முறையை ஒட்டி, மின்னோடியைத் தொடர் நிலை மின்னோடி, பக்கவாட்டு மின்னோடி, இரு முறை (கலப்பு) மின்னோடி என்று மூன்று வகைப் படுத்தலாம். மின் வகைகள் ரெண்டும் பெரிதும் பயன் படுகின்றன. தொடர் நிலை மின்னோடி இழுவைப் பயன்களுக்குப் பயனாகிறது. கோட்பாடு. மின்னோடி மின் மூலங்களின் குறுக்கே இணைக்கப் படும் போது, மின்னோட்டம், புலச் சுருளைகள் மற்றும் சுழலிச் சுருளைகள் மூலம் பாய்கிறது. புல மின்னோட்டம் காந்தப் பாயத்தை உருவாக்குகிறது. மின்னோட் டம் பாயும் சுழலிக் கடத்திகள், காந்தப் பாயத்தில் உள்ளன. அதனால், அவற்றின் மேல் ஃபிளமிங்கின் இடக்கை விதியின் படி ஒரு விசை உருவாகிறது. ஓடி சுழலத் தொடங்கும் போது, கடத்திகள் பாயத்தை வெட்டுவதால், மின்னியக்கு விசை உருவாகிறது. அதன் திசை, சுழற்சியை நிறுத்த முயலும் படி அமைகிறது. (லென்ஸ் விதி). சுழலிச் சுருளையில் செலுத்தப் படும் மின்னழுத்தம் V, மின்னியக்கு விசை Ea என்றும் கொள்ளலாம். சுருளையின் தடை Ra–வாக இருப்பின், சுழலிச் சுருளை மின்னோட்டம் I_a = V\, -\, E_b / R_a நேர் மின்னோடியில் திருக்கம் உருவாதல். புலச் சுருளைகளின் மூலம் மின்சாரம் பாய்வதால், காந்தப்பாயம் உருவாவது அறியப் பட்டது. சுழலியின் அச்சுக்கு இணை திசையிலுள்ள சுருளைகளில் மின்சாரம் பாய்வதால், காந்தப் பாயத்திற்குச் செங்குத்தாக அவை உள்ளன. இதனால், கடத்திச் சுருளையில் தொடு கோட்டுத் திசையில் விசை உருவாகிறது. சுழலிச் சுருளைகள் இணை பாதைகள் அமையும் வண்ணமும், வட துருவத்திலிருக்கும் கடத்திகள் அனைத்தும் ஒரு திசையிலும், தென் துருவத்திலிருக்கும் கடத்திகள் எதிர்த் திசையிலும் மின்னோட்டம் பாயும் வண்ணமும் மின்தொடிகள் (brushes) அமைக்கப் பட்டுள்ளன. இதனால், மின்னோடியிலுள்ள கடத்திகள் அனைத்தும், சுழலியின் அச்சைச் சுழற்றி, ஒரே திசையில் (கடிகை அல்லது எதிர்க் கடிகை) சுற்றுமாறு விசை பெறுகின்றன. இவ்வாறு ஒரு திருக்கம் உருவாகி, மின்னோடியைச் சுழலச் செய்கிறது. இந்தத் திருக்கத்தின் மூலம் மின்னோடி சுழலத் தொடங்குகிறது. அதில் உருவாகும் திருக்கமும், பளுவின் திருக்கமும் சமமாகும் வரை, அது முடுக்கம் பெறுகிறது. கணக்கியல் வாயிலாக ஒரு கடத்திக்கான விசை F = BI நியூட்டன் B–காற்று வெளியில் பாய அடர்த்தி L–கடத்தியின் நீளம் (மீட்டர்) T–கடத்தியின் திருக்கம் =F (கடத்தியின் ஆரம் அச்சிலிருந்து) (1). (2) இவற்றிலிருந்து T = Blr நீயூட்டன்–மீட்டர் ஓடியின் திறன் KW = 2 \pi hT / 1000 h = சுற்று /நொடியில் வேகம் நேர் மின்னோடியின் பண்புகள். நேர் மின்னோடியின் பண்புகளைப் பயன்படுத்திக் கீழ்க் காணுமாறு எழுதலாம். விசை = BI நியூட்டன் திருக்கம் = விசை X ஆரம் Z–கடத்திகளுக்கு மொத்தத் திருக்கம் Te= ZBIr நியூட்டன் மீட்டர் P–துருவங்களின் எண்ணிக்கை d–விட்டம் L–நீளம் Φ–துருவத்தின் பாயம் B=PΦ / IIdl a–சுருளைப் பாதைகளின் எண்ணிக்கை Ia–சுழலி மின்னோட்டம் எனில், I =Ia / a \begin{align} &T_e = \frac {Z P \phi}{\pi d l} \frac {I_a}{a} \times \frac {I_d}{2} \\ &= (\phi I_a) (Z / {2 \pi})(p / a) \end{align} Z₁Pa– ஆகியவை நிலையானவை T_e = K_t \phi I_a நியூட்டன் மீட்டர் தொடர் மின்னோடி. இதில் புல மின்னோட்டமும், சுழலி மின்னோட்டமும் ஒன்றேயாகும். T_a \infty I_a^2 &= \frac {V - I_a \big( R_a + R_{se} \big)} {Kt \phi} \end {align} தொடர் மின்னோடியின் வேகம் பளு மின்னோட்டத்திற்கு எதிர் விகிதப் பொருத்தமுடையது. அதன் முடுக்கம் (பளு மின்னோட்டம்)² ஐ ஒட்டி அதிகரிக்கும். ஆகவே, அதில் தொடக்கத் திருக்கம் உண்டு. இது வேகம் குறையும் பண்புடையது. பக்க இணைப்பு வகை மின்னோடி. இதில் புல மின்னோட்டம் நிலையானது. மின் காந்தத் திருக்கம் T_a \infty I_a வேகம் N = \frac {Ee}{Kf \phi} = \frac {V-I_a R_a}{Ke\phi} ஆகவே I_a R_a வீழ்ச்சிக் குறைவாக இருப்பதாலும், கிளர்வு மின்னழுத்தமும் நிலையாக இருப்பதாலும், வேகம் நிலையாக இருக்கும். இரு முறை (கலப்பு) மின்னோடி. இதில் புலச் சுருளை, சுழலிச் சுருளையுடன் பக்கவாட்டு இணைப்பு, தொடர் இணைப்பு இரண்டும் கொண்டமைவதால், இரு வகைப் பண்புகளும் இணைந்து காணப் படும். தொடக்கி. நேர் மின்னோடியின் சுழலிச் சுருளைகளின் தடை மிகக் குறைவானது. ஆகவே, மின் மூலத்தோடு நேரடியாக இணைத்தால், அதிக அளவு மின்னோட்டம் பாய்ந்து, சுழலிச் சுருளையைச் சேதப் படுத்தி விடும். இம்மின்னோட்டத்தை மட்டுப் படுத்த, சுழலிச் சுருளையோடு தொடர் இணைப்பில் ஒரு தொடக்கத் தடை இணைக்கப் பட்டு, மின்னோடி வேகம் பெறப் பெற, அது படிப் படியாகக் குறைக்கப் பட்டுச் சுற்றிலிருந்து துண்டிக்கப் படுகிறது. மின்னோடியின் செயற்பாடு. மின்னோடியின் செயற்பாடு ஒரு சமன் சுற்று, செயற்பாட்டுச் சமன்பாடு, திறன் வழி வரை படம் ஆகியவற்றால் விளக்கப் படும். செயற்பாட்டுச் சமன்பாடுகள் —எஸ். சுந்தரசீனிவாசன்