இளந்தத்தன்
iḷantattaṉ
சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர்.
சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். ஒருகால் இவர் சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூருக்குச் சென்றார். உறையூர் வந்த இப்புலவரை நலங்கிள்ளியின் ஒற்றராவார் எனத் தவறாகக் கருதி, உறையூரிலிருந்த நெடுங்கிள்ளி கொல்ல முற்பட்டான். இதனை உணர்ந்த கோவூர் கிழார் இளந்தத்தன் ஒற்றரல்லர் என்னும் உண்மையை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொல்லாது தடுத்துப் புலவரைக் காத்தார். இச்செய்தி புறநானூற்று 47–ஆம் பாடலின் அடிக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது. கோவூர்கிழார் நெடுங்கிள்ளிக்குக் கூறியதாக அமைந்த பாடலில் பரிசில் வாழ்க்கையினராகிய புலவர்களின் வாழ்க்கைச் செம்மையும், மேம்பாடும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. ‘வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை’ என்னும் பகுதி புலவர் வாழ்க்கையின் செம்மையையும், ‘நும்மோரன்ன செம்மலும் உடைத்தே’ என்னும் பகுதி அதன் மேம்பாட்டையும் உணர்த்துவனவாக உள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 484)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/verkmxr9/
தமிழ்“இளந்தத்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/verkmxr9/APA
Oliyon Research. (2026). இளந்தத்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/verkmxr9/MLA
"இளந்தத்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/verkmxr9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment