செரிமானம்
cerimāṉam
உணவு, வாய் மூலம் உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல் ஆகியவற்றை அடையும் போது, நிகழும் பல மாற்றங்களைச் செரிமானம் எனலாம்.
உணவு, வாய் மூலம் உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல் ஆகியவற்றை அடையும் போது, நிகழும் பல மாற்றங்களைச் செரிமானம் எனலாம். இதன் மூலம், மனிதனின் இன்றியமையாத தேவைகளுக்கு வேண்டிய ஊட்டப் பொருள்கள் செரிமான மண்டலத்தில் உள்ளேற்கப் படுகின்றன.
வாயில் சுரக்கும் டயலின் என்னும் அமைலேஸ் ஓரளவு உணவைக் கூழாக்குவதில் உதவுகிறது. அயனிகள் (ஹைட்ரஜன், குளோரைடு, சோடியம், பொட்டாசியம்) நீர், பெர்சினோஜன், சீதம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியன இரைப்பையில் உள்ள ஆக்சிண்டிக் செல்களால் சுரக்கப் படுகின்றன. பெப்சினோஜன்கள், இரைப்பையின் பல பகுதிகளிலிருந்து சுரக்கின்றன. தவிர, சோடியம் பைகார்பனேட், கேஸ்டிரின் எனப்படும் ஹார்மோன், ஹிஸ்டமின் ஆகியவையும் இரைப்பையினுள் சுரக்கின்றன. இம்யூனோபுலின் Aஉம் சுரக்கிறது. இவை அனைத்தும் உணவுச் செரிமானத்தில் பங்கேற்கின்றன.
செரிமானமும், உள்ளேற்பும் சிக்கலான நிகழ்வுகளாகும். இரைப்பை, சிறு குடல், பெருங் குடல் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகள், மனிதனில் மிகவும் சிறப்பாகவும், ஒருங்கிணைந்தும் நடை பெறுகின்றன. சாதாரணமாக, ஊட்டச் சத்து உணவில் சராசரி 100 கி. கொழுப்பும், 400 கி. கார்போஹைட்ரேட்டும், 100 கி. புரதமும், 1½–2 லி. நீரும் உள்ளன. உணவில், தேவையான அளவு சோடியம், குளோரைடு, பொட்டாசியம், கால்சியம் ஆகிய கனிமங்கள், வைட்டமின்கள் முதலானவை உள்ளன. மேலும், உட்புற நீர்மங்களான பித்த நீர், இரைப்பை நீர், கணைய நீர் ஆகிய ஏறத் தாழ 7 லி. நீர்மம் குடலினுள் செல்லும். இவற்றில் அயனின், புரதம், கொலஸ்ட்ரால், பாஸ்ஃபோலிப்பிட், பித்த உப்பு முதலியன காணப் படுகின்றன. மேற்கூறிய அனைத்தும் 200 கிராம் மலமாக வெளிச் செல்கின்றன. இதில் 2–6 கி. கொழுப்பு, 1–2 கி. நைட்ரஜன், சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் ஆகியவை காணப் படுகின்றன.
உணவின் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகியன முன் சிறு குடலிலும், நடுச் சிறு குடலிலும், செரிமானமடைந்து உள்ளேற்கப்படுகின்றன. கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம் ஆகியன சிறு குடலில் உள்ளேற்கப்படுகின்றன. பெரும்பாலான பித்த உப்புகளும், வைட்டமின் B12உம், கடைச் சிறு குடலில் உள்ளேற்கப்படுகின்றன. நீர் மற்றும் சோடியம் குளோரைடு, பைகார்பனேட் ஆகியன பெருங் குடலில் உள்ளேற்கப்படுகின்றன.
குளூக்கோஸ், காலக்டோஸ், அமினோ அமிலங்கள், மோனோ, டைபெப்டைடுகள், சோடியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட், இரும்பு, வைட்டமின் B12, கால்சியம் முதலியன முனைப்புடன் உள்ளேற்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள், மோனோ கிளிசரைடு, லைசோபாஸ்ஃபோலிப்பிடுகள், கொலஸ்ட்ரால், வைட்டமின் A, D, E, K. பொட்டாசியம், நீர், ஃபிரக்டோஸ் முதலியன பரவலாக உள்ளேற்கப்படுகின்றன.
—மு.கி. பழநியப்பன் நூலோதி. Jay H. Stein, Internal Medicine, First Edition, Little Brown and Co., Boston, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 830)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdjaasgf/
தமிழ்“செரிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vdjaasgf/APA
Oliyon Research. (2026). செரிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdjaasgf/MLA
"செரிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/vdjaasgf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment