அம்பர்
ampar
அம்பர் (Ambergris) கடல்படு திரவியம் ; ஓர்க்கோலை எனவும்படும் ; திமிங்கில வகையில் ஒன்றான ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் குடலிலிருந்து வரும் மெழுகு போன்ற பொருள்.
அம்பர் (Ambergris) கடல்படு திரவியம் ; ஓர்க்கோலை எனவும்படும் ; திமிங்கில வகையில் ஒன்றான ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் குடலிலிருந்து வரும் மெழுகு போன்ற பொருள். இது வாசனைத் திரவியங்கள் செய்வதற்குப் பயன்படுகிறது ; அவற்றின் மணம் நெடு நாளைக்கு நிலைத்திருக்கச் செய்கிறது. சில சமயங்களில் திமிங்கிலத்தின் உடலிலிருந்து கழிவுப் பொருளாக வெளியே வந்து, நீரில் கட்டிக்கட்டியாக மிதந்து கொண்டிருக்கும்; கரையிலும் ஒதுங்கும். செத்துப்போன திமிங்கிலத்தின் உடலிலிருந்தும் இதை யெடுப்பார்கள். இது திமிங்கிலத்துக்குக் குடல் நோயினால் உண்டாவது என்கிறார்கள். குடலுக்குள் இருக்கும்போது இது கெட்ட நாற்றமுள்ளது ; காற்றுப்பட்டபிறகு நல்ல மணமுடையதாகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 133)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vc5c2j4k/
தமிழ்“அம்பர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc5c2j4k/APA
Oliyon Research. (2026). அம்பர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vc5c2j4k/MLA
"அம்பர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vc5c2j4k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment