இகுவானொடான்
ikuvāṉoṭāṉ
(Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை.
(Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை. 15-30 அடி நீளமுள்ளது.
சுமார் 12 கோடிஆண்டுகளுக்கு முன் ஜுராசிக், கீழ்க்கிரிட்டேஷஸ் காலத்துப் பாறைகளில் பாசில்கள் அகப்படும். பருத்த உடம்பும் மிகப் பலமான நீண்டவாலும் உள்ளது. முன்கால் சிறியது; தழை, கிளை முதலியவற்றைப் பற்ற ஏற்றது எனத் தெரிகிறது. இரண்டு தாடையிலும் பல்லில்லை. முகம் பறவை அலகுபோல இருந்திருக்கலாம். எலும்புகள் உள்ளே தொளையுள்ளவை. காங்கருபோலப் பின்னிரண்டு கால்களையும் வாலையும் முக்காலிபோல உபயோகித்திருக்கலாம். இங்கிலாந்திலும் பெல்ஜியத்திலும் ஐரோப்பாவின் மற்றப் பாகங்களிலும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 546)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7hc327m/
தமிழ்“இகுவானொடான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7hc327m/APA
Oliyon Research. (2026). இகுவானொடான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7hc327m/MLA
"இகுவானொடான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7hc327m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment