{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v7hc327m/", "data": {"id": "v7hc327m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v7hc327m/", "kind": "article", "headword": "இகுவானொடான்", "romanization": "ikuvāṉoṭāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.161535+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை.", "body_ta": "(Iguanodon) ஊர்வனவற்றில் அற்றுப்போன ஒருவகை. 15-30 அடி நீளமுள்ளது.\n\nசுமார் 12 கோடிஆண்டுகளுக்கு முன் ஜுராசிக், கீழ்க்கிரிட்டேஷஸ் காலத்துப் பாறைகளில் பாசில்கள் அகப்படும். பருத்த உடம்பும் மிகப் பலமான நீண்டவாலும் உள்ளது. முன்கால் சிறியது; தழை, கிளை முதலியவற்றைப் பற்ற ஏற்றது எனத் தெரிகிறது. இரண்டு தாடையிலும் பல்லில்லை. முகம் பறவை அலகுபோல இருந்திருக்கலாம். எலும்புகள் உள்ளே தொளையுள்ளவை. காங்கருபோலப் பின்னிரண்டு கால்களையும் வாலையும் முக்காலிபோல உபயோகித்திருக்கலாம். இங்கிலாந்திலும் பெல்ஜியத்திலும் ஐரோப்பாவின் மற்றப் பாகங்களிலும் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தது."}}