மின்மாற்றி

miṉmāṟṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மின் கருவி. மின்காந்தப் புலத்தால் இரண்டு மின்கம்பிச்சுருள்கள் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கருவி. ஒரு மின்சுருளில் உள்ள மின்னழுத்ததைப் போல பலமடங்கு மின்னழுத்தமோ ஒன்றுக்கும் கீழான குறைமடங்கு மின்னழுத்தமோ மற்ற மின்சுருளில் தூண்டப்படும். மின்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த மின்னழுத்த மாற்றம் அமையும். மாறுமின்னோட்ட மின்கடத்தலில் உயர் மின்னழுத்தத்திலிருந்து வீடுகளுக்குப் பயன்படுமாறு குறைந்த மின்னழுத்தம் (220 வோல்ட்டு அல்லது 110 வோல்ட்டு என) உள்ளதாக மாற்ற இக்கருவிகள் பயன்படுவது ஒருவகைப் பயன்பாடு. — transformer
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்மாற்றி)
2.
மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுகிற மின்னியல் சாதனம் — rectifier
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திருத்தி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1227)
3.
நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் எந்திரவியல் அமைப்பு — inverter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 373)
4.
இரு திசை மின்னோட்டத்தை ஒரு திசை மின்னோட்டமாக மாற்றுங் கருவியமைப்பு — converter
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6arvygt/

தமிழ்
“மின்மாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6arvygt/
APA
Oliyon Research. (2026). மின்மாற்றி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v6arvygt/
MLA
"மின்மாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6arvygt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment