இருநலக்கோடு
irunalakkōṭu
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது கட்டடக்கலை சிறப்புப் பெற்றது. இங்குள்ள குகைக் கோயிலில் உள்ள சிவ தட்சீணாமூர்த்தியின் புடைச்சிற்பம் நான்கு கைகளுடன் காலின் மேல் கால் வைத்து அமர்ந்த நிலையில் உள்ளது. சடைமுடியும் உடலைச் சுற்றிய பாம்பும் நன்கு செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் ஒவ்வோரமைப்பும் மிக்க வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைகளுள் இரண்டில் புத்தகமும் செப-
தட்சிணா மூர்த்தி, இருநலக்கோடு
மாலையும் உள்ளன. மற்றைய இரண்டு கைகளுள் ஒன்று காலின் மீதும் மற்றொன்று அழைப்பது போலவும் உள்ளன. தட்சிணா மூர்த்தியைச் சுற்றி அவரது காலடியில் நான்கு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். உயர்ந்த மெய்ப்பொருளைத் தட்சிணாமூர்த்தி விளக்குவதைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்போர் போன்று இம்முனிவர்கள் செதுக்கப்பட்டுள்ளனர். இப்புடைச்சிற்பம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கேரளாவில் காணப்படும் தட்சிணாமூர்த்திச் சிற்பங்களுள் இருநலக் கோட்டிலுள்ள (Irunalakkode) இச்சிற்பமே பழைமையும் சிறப்பும் பெற்றதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 202)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utxrwara/
தமிழ்“இருநலக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/utxrwara/APA
Oliyon Research. (2026). இருநலக்கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utxrwara/MLA
"இருநலக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/utxrwara/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment