ஒருவரைப் பற்றிக் குறிப்பிடும்போது மதிப்பை வெளிப்படுத்தும் நிலை பல மொழிகளிலும் காணப்படுகிறது. குறிப்பிட்ட ஒருவன் அல்லது ஒருத்தியை ஒருவர் எனல் உயர்வு கருதிய பன்மையாகும். உயர்வுச் சிறப்பை வெளிப்படுத்துவதில் எல்லா மொழிகளும் ஒரே முறையைக் கையாளுவதில்லை. தமிழ் மொழியில் தன்மை, முன்- னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் உயர்வு காட்டப்படுகிறது. பண்டை இலக்கியங்கள் அனைத்திலும் இக்கூறு காணப்படுகிறது. உயர்வு ஒருமையை உயர்வாகக் குறிக்கப் பன்மை வடிவங்களைப் பயன்படுத்துவதைத் தொல்காப்பியம் கூறுகிறது (தொல். 27). ஒருவனை அல்லது ஒரு பொருளைக் குறிக்கப் பன்மை வடிவங்களைப் பயன்படுத்தும் முறை பேச்சு வழக்கில் உள்ளதைச் சுட்டும் தொல்காப்பியர், இலக்கண விதிகளுக்கு இக்கூறு ஒத்ததன்று என்பதையும் காட்டுகிறார். :::{| உயர்வு ஒருமையைக் குறிக்கப் பதிலிடு பெயர்களின் (Pronouns) பன்மை வடிவங்களும் பலர்பால் ஒட்டுகளும் பயன்படுத்தப் பெறுகின்றன. (அ) பதிலிடு பெயர்கள் பன்மைப் பதிலிடு பெயர்களே உயர்வுப் பதிலிடு பெயர்களாக வழங்குகின்றன. தமிழில் தன்மையிடத்தில் உயர்வுப் பதிலிடு பெயர்கள் மிக அருகியே காணப்படுகின்றன. முன்னிலையிலும் படர்க்கையிலும் உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள் பெருவழக்காக உள்ளன. பலர்பால் சுட்டும் எவர் என்பது உயர்வு ஒருமையாகவும் வரும். (ஆ) உயர்வு ஒருமை ஒட்டுகள் பலர்பால் சுட்டும் ஒட்டுகள் உயர்வு ஒருமை காட்டும் ஒட்டுக்களாக வருகின்றன. –அர், –ஆர், –வர், –ஓர் ஆகியவை உயர்வு ஒருமை ஒட்டுகள். — அர்: (எ–கா.) அரசர், தோழியர். —ஆர்: –ஆர் வராத பல பெயர்களின் பின்னால் இவ்வொட்டு இடம்பெற்று உயர்வு சுட்டும். ::(எ–கா) மகனார், தமையனார். உயர்வைச் சுட்ட இயற்பெயரோடு — ஆர் விகுதி சேர்க்கப்படுவதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது (சொல். 270). ::(எ–கா) சாத்தனார், சிதம்பரனார். — வர்: பன்மை ஒட்டு வரும் இடங்களிலெல்லாம் இவ்வொட்டு இடம் பெறும். ::(எ–கா) புதல்வர், சிறந்தவர். — ஞர்: (எ–கா) கவிஞர், அறிஞர். சாமி, அடிகள், ஐயா, அம்மையார் முதலான சொல்லொட்டுக்களும் உயர்வைச் சுட்டுகின்றன. ::(எ–கா) கமலா அம்மையார், இளங்கோ அடிகள், காந்தியடிகள். இச்சொல்லொட்டுகளுடன் ‘அவர்கள்’ சேர்ந்து இரட்டை உயர்வு ஒருமையாக வரும். ::(எ.கா) சண்முகம் ஐயா அவர்கள், ::::இந்திரா அம்மையார் அவர்கள். சிறப்புப் பெயரை அல்லது பதவிப் பெயரைத் தொடர்ந்தும் ‘அவர்கள்’ வரும். ::(எ–கா) மீனாட்சி சுந்தரம் அவர்கள் ::::துணைவேந்தர் அவர்கள். இ) தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிடங்களையும் உயர்வு ஒருமை இடம் பெறும் போது வினை முற்றுகளிலும் பன்மை விகுதிகளே இடம் பெறுகின்றன. நின்றலம், சென்றெலம். கண்டாம், சென்றாம். இயற்பெயர்கள் பயனிலையில் பன்மை விகுதிகளை ஏற்கும் என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. ::(எ–கா) சாத்தனார் வந்தார். இரா.செ.