சிர்க்கோனியப் பதனிடுதல்
cirkkōṉiyap pataṉiṭutal
அண்மைக் காலமாகச் சிர்க்கோனிய உப்புகளைக் கொண்டு தோல் பதனிடும் முறை அறிவியலாரால் ஆழ்ந்து ஆராயப்படுகிறது.
அண்மைக் காலமாகச் சிர்க்கோனிய உப்புகளைக் கொண்டு தோல் பதனிடும் முறை அறிவியலாரால் ஆழ்ந்து ஆராயப்படுகிறது. இம்முறையால் முழுக்க, முழுக்க வெள்ளைத் தோலை உண்டாக்கலாம். இதன் பதனிடும் தன்மை, தாவரச் சாறுகளைக் கொண்டு பதனிடும் முறைக்கு இணையாக அமையும். அதாவது, காலணி அடித் தோலுக்கு இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு பதனிட்டால், மிகவும் உறுதியாகவும், நீண்ட நாளுக்குத் தேயாமலும் இருக்கும். சிர்க்கோனியப் பதனிடும் முறை முதன்முதலில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னால், அயன் சோமர்வில்லி என்பாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் சிர்க்கோனியம் பதனிடுவது குறைந்த pH அளவில் செய்யப்படுகிறது. (பதனிடுவது குறைந்தது pH இரண்டிற்குக் கீழ் இருக்க வேண்டும்). இதற்கு ஏற்றவாறு பச்சைத் தோல்களைச் சுண்ணாம்பு நீக்கிய பின், ஊற வைத்தலை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். குறைவான pH அளவில்தான் சிர்க்கோனிய உப்புகள் நன்றாகக் கரைந்து தோலின் ஊடே புக முடியும். அதனால், பதனிடுவது குறைவில்லாமல் நடைபெறும்.
சிர்க்கோனியம் பதனிடும் போது, சோடியம் சிட்ரேட் அல்லது சிட்ரிக் அமிலம் போன்றவற்றை மாற்றிகளாகப் (masking agent)பயன்படுத்துவர். இதனால் பதனிடும் தன்மை நன்றாக அமையும். சிர்க்கோனியப் பதனிடும் பொருளைத் தனிப்பட்ட பதனிடும் பொருளாகப் பயன்படுத்த இயலும். இது வெண்மையான, நிலையான தோலைத் தரும். மீண்டும், மீண்டும் நீரில் கழுவ இயலும். இந்தத் தோல்கள் போதிய நீள் வலிமையுடையவையாகவும், வெளிச்சத்தால் தாக்கப்படாதவையாகவும், தேய்வுக் காப்புடையவையாகவும் இருக்கின்றன.
சிர்க்கோனியப் பதனிடும் பொருளைக் கொண்டு பல தோல்களைப் பதனப்படுத்தி, ஒப்பனையும் செய்யலாம். அமெரிக்காவில் சிர்க்கோனியப் பதனிடும் பொருளைக் கொண்டு காலணி அடித் தோல்கள் செய்யப்படுகின்றன. மேலும் சுயட் (suede) என்னும் ஆடைத் தோல்கள் செய்யப் பதனப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். —எம்.எஸ். ஒளிவண்ணன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 254)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugpeshq8/
தமிழ்“சிர்க்கோனியப் பதனிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ugpeshq8/APA
Oliyon Research. (2026). சிர்க்கோனியப் பதனிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugpeshq8/MLA
"சிர்க்கோனியப் பதனிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ugpeshq8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment