அதாய்-தின்-கா-சோப்ரா என்பது ஒரு மசூதியின் பெயர். சாகம்பரியைத் தலைநகராகக் கொண்ட சாகமன அரசர்களுள் ஒருவரான விக்கிரகராசா விசாலதேவர் என்பார், சிறந்த கவிஞரும் இலக்கியப் புரவலருமாவார். அவர் எழுதிய அரகலி நாடகத்தின் சில பகுதிகள், அதாய்-தின்-கா-சோப்ர அதாய்-தின்-கா-சோப்ரா என்னும் மசூதியின் சுவரில் பதிக்கப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் இந்நாடகப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கண்டுபிடிக்கப்பட்ட ‘லலிதா விக்கிரகராசா’ என்னும் பிறிதொரு நாடகம், விக்கிரகராசாவின் மேல் மகாகவி சோமதேவர் என்பவரால் எழுதப்பெற்றதாகும். அதுவும் அங்கேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.