இராசாராணி கோயில்
irācārāṇi kōyil
ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்.
ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில். இது கி.பி. 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலின் கருவறையில் மூலவர் இல்லை. கல்வெட்டுக் குறிப்புகள் இல்லாமையால் இக்கோயில் எக்கடவுளுக்கு உரியது என்பது தெரியவில்லை. இக்கோயில் இராசாவும் இராணியும் தங்குமிடம் என்று சிலரும், இக்கோயிலில் பயன்படுத்திய கல்லின் பெயர் இராசாராணி என்று சிலரும் கூறுவர். ஆனால், இக்கோயில் கோயிலுக்கு உண்டான அனைத்துச் சிறப்புக் கூறுகளையும் கொண்டு விளங்குவதால் இதைக் கோயில் என்றே கூறலாம்.
வடமொழி நூல்களான ஏசுமரா புராணமும் {Ekamara) சுவர்ணதிர் மகோதயாவின் (Svarnnadir Mahodaya) 9–ஆம் பாகமும் ஏகம்ரா சந்திரிகாவின் (Ekamra Chandrika) 14–ம் பாகமும் கபிலசம்கிதை (Kapila Samhita) போன்றவையும் இந்திரேசுவரர் என்ற கோயில் புவனேசுவரத்தில் இருந்ததாகக் கூறுகின்றன. சுவரா என்று முடிவதால் இது சிவன் கோயிலாகும். இப்பொழுது இப்பெயரில் எந்தக் கோயிலும் இல்லை. எனவே அறிஞர்கள் இக்கோயிலை இந்திரேசுவரர் கோயிலாக இருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இக்கோயிலின் செகமோகன் (Jagamohan) என்னும் முன் மண்டபத்தின் இருபக்கங்- களிலும் உள்ள சண்டா, பிரசண்டா என்ற இரு துவாரபாலகர்கள் சடைமகுடத்துடனும் வலக்கையில் கீழே குத்திக்கொண்டு இருக்கும் திரிசூலத்துடனும் காணப்படுதலாலும், மண்டபத்தின் வாயிற் பலகையின் மேல் உள்ள கட்டையில் இலகுலிசா யோக நிலையில் காணப்படுதலாலும் இக்கோவில் சிவன் கோயிலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.
இராசாராணி கோயில் – புவனேசுவரம்
இக்கோயிலின் விமானமானது உயரமான சிகரத்தினையும் அதனுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் அங்க சிகரங்களையும் கொண்டு விளங்குகின்றது. சில இடங்களில் அங்க சிகரமானது ஆமலகம் (Amalakam) என்று சொல்லப்படும். கருவறையின் பீடம் ஐந்து கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் மேலும் மூன்று கட்டங்களைக் கொண்ட அடிபீடம் உள்ளது. இச்சுவரில் உள்ள சிற்பங்கள் சிற்றின்பக் காட்சிகளைக் காட்டுகின்றன. இரதங்களுக்கு இடையே உள்ள இடத்தில் வியாலமும் சிங்கமும் யானையும் அமைந்த அமைப்புடையவையும் (Gaja–Simhas) சிற்றின்பக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களும் உள்ளன. இக்கோயிலின் சிகரம் ஏழு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உச்சியில் உள்ள ஆமலக சிகரத்தை நான்கு மூலையிலும் மண்டியிட்டு உட்கார்ந்த நிலையில் உள்ள நான்கு மனித உருவங்கள் தாங்கிக் கொண்டுள்ளன.
செகமோகன் என்று சொல்லப்படும் மண்டபமானது எவ்வித வேலைப்பாடுமின்றி விளங்குகிறது. இதன் கூரையானது ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட பலகைக் கற்களைக் கொண்டு விளங்குகின்றது. இக்கோயில் கசராகோவிலுள்ள (Gajaraho) கோயில்களின் அமைப்பை உடையது. கே.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 46)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/udaa3x62/
தமிழ்“இராசாராணி கோயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/udaa3x62/APA
Oliyon Research. (2026). இராசாராணி கோயில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/udaa3x62/MLA
"இராசாராணி கோயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/udaa3x62/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment