சிறு குடல் தீங்கற்ற கட்டிகள்
ciṟu kuṭal tīṅkaṟṟa kaṭṭikaḷ
பித்த நாளம், ஆம்புல்லா கூம்பு, கணைய நாளங்களுக்கும், கல்லீரலுக்கும், பித்தப் பைக்கும் முன்பாக உள்ள சிறு பகுதியாகிய முன் சிறு குடல் பகுதி ஆகியன தீவிர நோய்களை ஏற்படுத்தக் கூடிய இடங்களாகும்.
பித்த நாளம், ஆம்புல்லா கூம்பு, கணைய நாளங்களுக்கும், கல்லீரலுக்கும், பித்தப் பைக்கும் முன்பாக உள்ள சிறு பகுதியாகிய முன் சிறு குடல் பகுதி ஆகியன தீவிர நோய்களை ஏற்படுத்தக் கூடிய இடங்களாகும். அழற்சி, உணவுச் சத்து உறிஞ்சும் திறன் இழப்பு நோய்களைத் தவிர முன் சிறு குடலில் ஏற்படக் கூடிய நோய்களில் முக்கியமானவை கட்டிகள்தாம். இவை தீங்கற்ற கட்டிகள், தீங்குடைய புற்றுக் கட்டிகள் என இரு வகைப்படும்.
தீங்கற்ற கட்டிகள். குடற் சுவர்ப் பரப்புத் திசுக்களிலிருந்து தோன்றும் கட்டிகள், குடல் தசை நார்களிலிருந்து உருவாகும் லியோமயோமா, நார்த் திசுக்களிலிருந்து உண்டாகும் ஃபைப்ரோமா, கொழுப்புத் திசுக்களில் வரும் லைபோமா, சிறு குருதி நாளத் திசுக்களிலிருந்து தோன்றும் ஆன்ஜியோமா, நரம்பணுக்களிலிருந்து வெளிப்படும் நியூரிலியோமோ ஆகியன தீங்கற்ற கட்டிகளாகும்.
கழலைக் கட்டிகள். இவை, தொங்கு சிறு கட்டிகள் (polyps) எனப்படுகின்றன. இவை ஒன்றாகவோ, பலவாகவோ தோன்றலாம். இவை ஒரு காம்பினால், குடல் சுவரோடு இணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது குடற் சுவருடன் ஒட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது மேற்கூறிய இரண்டு முறைகளுக்கு இடைப்பட்ட நிலையிலும் காணப்படலாம். பொதுவாக இவை அழற்சியாலோ, குடல் சுவர்த் திசுக்கள் பிறவியிலேயே தாறுமாறாக அமைந்துள்ளமையாலோ ஏற்படுகின்றன.
விரல் போன்ற நுண்ணமைப்பைப் பெற்ற கழலைக் கட்டிகள் (villus adenoma) குடலின் குறுக்குச் சுவரைச் சுற்றி அணைத்துக் கொண்டு தோன்றுகின்றன. எனவே, இவை குடல் அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாகின்றன. சில நேரங்களில் இவற்றிலிருந்து குருதிக் கசிவும் ஏற்படலாம். இத்தகைய கட்டிகள் முன் குடலில் அரிதாகத் தோன்றும் போது, அவற்றை ஆம்புல்லா ஆஃப் வேட்டர் எனப்படும் துளைக் கதவருகிலிருந்து தோன்றும் கட்டிகளிலிருந்து வேறுபடுத்த வேண்டும்.
பாரம்பரிய குடல் கழலைகள். சில நேரங்களில் சிறு குடலில் பல கட்டிகள் காம்பு ஒட்டியவையாகக் காணப்படலாம். வேறு உறுப்புகளில் கட்டி ஏற்படும் போது, அந்த அடிப்படையில் முன் சிறு குடலிலும் பல கட்டிகள் காணப்படலாம். பல சிறு கட்டிகள் குடற்பகுதிகளில் காணப்படும் போது, அவை பின்னாளில் புற்று நோய்க் கட்டியாக மாறி விட வாய்ப்புண்டு. முன் சிறு குடல் கட்டிகளுக்கு இத்தன்மை இல்லையென்றாலும், இவை நாளடைவில் புற்று நோயாகி விடலாம்.
லியோமயோமா. குடற் சுவர் உட்புறத் திசுக்கள் தவிர, ஏனைய திசுக்களினின்றும் வெளிப்படும் கட்டிகளில், இக்கட்டிகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. வலி தாராத இக்கட்டிகள், மனிதன் உயிரோடு இருக்கும் போது, எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காமையால், இவற்றைப் பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் அறியப்படவில்லை. எனவே, குடலில் வேறு நோய்க்காக அறுவை செய்யும் போது, தற்செயலாகவே இவை இருப்பது தெரிய வரும்.
குடலைச் சுற்றிக் குறுக்காகவும், நீள வாக்கிலும் ஓடும் தசை நார்களிலிருந்து இக்கட்டிகள் தொடங்குகின்றன. சில நேரங்களில் பெரிய உருவத்தைப் பெறும் போது, இவற்றால் குடல் அடைப்பு அல்லது குருதிக் கசிவு ஏற்பட, அதனால் மலத்தில் குருதி கலந்து வரலாம். குடல் செருகலும் ஏற்படலாம்.
கட்டிகளின் வெளித் தோற்றம். இவை உருண்டையாகவும், கெட்டியாகவும் மஞ்சள் நிறமாகவும், சிறியனவாகவும் இருக்கலாம். பெரியனவாகவும் இருக்கலாம். சில நேரங்களில் இவை குடல் பாதையை நோக்கி வளர்வதால், குடல் பாதையில் தொங்கத் தொடங்கி, குடல் சுவரோடு இணைவதற்கு ஒரு காம்பை ஏற்படுத்திக் கொள்ளும். குடல் சுவரின் வெளிப்புறம் நோக்கி வளர்ந்து, அங்கேயும் இவை பிதுங்கி நிற்கலாம். கொழுப்புக் கட்டிகளும், குருதி நாளக் கட்டிகளும் பிறவும் அரிதாகத் தோன்றக் கூடியவை. பொதுவாக, முன் சிறு குடலில் உண்டாகும் தீங்கற்ற கட்டிகள் மிகவும் குறைவே. —ராஜலட்சுமி நூலோதி. Basil C Mosch et. al, Gastro Enteric Pathology, Blackwell Scientific Publication, Oxford, London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 335)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ud4dysar/
தமிழ்“சிறு குடல் தீங்கற்ற கட்டிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ud4dysar/APA
Oliyon Research. (2026). சிறு குடல் தீங்கற்ற கட்டிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ud4dysar/MLA
"சிறு குடல் தீங்கற்ற கட்டிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ud4dysar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment