இராசராசேசுவர நாடகம்
irācarācēcuvara nāṭakam
முதலாம் இராசராச சோழனின் காலத்தில் (கி.பி.
முதலாம் இராசராச சோழனின் காலத்தில் (கி.பி. 985–1014) இயற்றப்பட்டது. இது இராசராசனின் பிறப்பு, இளமைக் காலம், வீரம், தியாகம் முதலானவற்றையும், அவன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எடுப்பித்த வரலாற்றையும் பற்றிய வரலாற்று முதன்மை கொண்ட நாடகநூல். திருவிழாக் காலங்களிலும் மற்றச் சிறப்பு நாட்களிலும் இந்நாடகம் தஞ்சையில் சாந்திக் கூத்தர்களால் நடிக்கப்பட்டது. முதலாம் இராசேந்திரனது ஆட்சிக்காலத்தினும் இந்நாடகம் நடிக்கப்பட்டது. இதற்காக இராசேந்திரன் நிவந்தங்கள் விட்டுள்ளான். இரண்டாம் இராசேந்திர சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1051-1063) வைகாசித் திங்களில் நடைபெற்ற பெரிய திருவிழாவின்போது, தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டுவதற்குச் சாந்திக் கூத்தன் திருவாளன் திருமுதுகுன்றன் ஆன விசயராசேந்திர ஆசாரியனுக்கும் அவன் கால்வழியினருக்கும் 120 கல நெல் ஆண்டுதோறும் ஊதியமாக அளிக்க நிவந்தம் அளிக்கப்பட்டது. இதனை இவ்வேந்தனே அளித்துள்ளான் என்பதனை இரண்டாம் இராசேந்திரனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாலறியலாம்.
இராசராசேசுவர நாடகத்தில் ஆசியன் (ஹாஸ்யன்) விக்கிரமாதித்தன் அச்சனான இராசராச நாடகப் பிரியன் என்பான் முக்கியப் பங்கேற்று நடித்தான் என்பதனை இவனது பெயரே உணர்த்தும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 41)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9gpbmdp/
தமிழ்“இராசராசேசுவர நாடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u9gpbmdp/APA
Oliyon Research. (2026). இராசராசேசுவர நாடகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u9gpbmdp/MLA
"இராசராசேசுவர நாடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u9gpbmdp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment