இரங்கல்

iraṅkal
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரவம் (ஆரவாரம்) — bruit, lose
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரங்கல்)
2.
கழிவு (கழிந்த பொருளுக்காக இரங்குதல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரங்கல்)
3.
அழுதல், வருந்துதல், உருகல், ஒலித்தல், அருள் செய்தல்
4.
இது திருக்குறளில் வரும் 117-ஆவது அதிகாரம். படர் மெலிந்து இரங்கல் என்பது அதிகாரம் தலைப்பு. தலைவி பிரிவு ஆற்றாதவள். தலைவனை நினைந்து நினைந்துத் தான் பெறுகின்ற துன்பத்தினை எப்போதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், தலைவி உடல் இளைத்து வருந்திக் கூறும் நிலையே இந்த இரங்கல்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 57)
5.
திருக்குறளின் 123-வது அதிகாரம். பொழுது கண்டு இரங்கல். இரண்டு அதிகாரங்களும் இன்பத்துப் பால் என்ற மூன்றாவது பிரிவிலே வந்துள்ளன. 'பொழுது கண்டு இரங்கல்' என்பது மாலைப் பொழுது வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் பற்றிக் கூறும் பகுதி தான் இந்த இரண்டாவது இரங்கல் பகுதி.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5u9axud/

தமிழ்
“இரங்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5u9axud/
APA
Oliyon Research. (2026). இரங்கல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u5u9axud/
MLA
"இரங்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5u9axud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment