இது தாடை எலும்பில் வரக் கூடிய கழலையாகும். கீழ்த்தாடை எலும்பே இந்நோயால் பாதிக்கப்படுகிறது. மெதுவாக வளரக்கூடிய இக்கட்டி சிறு உருண்டையாகத் தோன்றி வளர்ந்து, இறுதியில் எலும்பு முழுமையும் அழித்து விடும். இறுதி நிலையில் பற்கள் ஆடும். வாய் முழுதும் புண்ணாகும். கட்டியின் சுற்றுப் பகுதி வீங்கும் போது, இதை அறுவை மூலம் அகற்றி மருத்துவம் செய்யலாம். அறுவை செய்யப்பட்ட இடத்தில், விலா எலும்புப் பகுதியையோ, அக்ரிலிக் மூலப் பொருளால் செய்யப்பட்ட வடிவங்களையோ நிரப்பி, மருத்துவம் செய்வதன் மூலம் இழந்த முக வடிவத்தை மீண்டும் பெறக் கூடும். —ஜே. ஜி. கண்ணப்பன்