சூல் குழல் வரைவு
cūl kuḻal varaivu
எக்ஸ் கதிர் அரங்கத்தில் வல்லுநர் மூலம் கருப்பைச் சூல் குழல் வரைவு செய்யப்படுகிறது.
எக்ஸ் கதிர் அரங்கத்தில் வல்லுநர் மூலம் கருப்பைச் சூல் குழல் வரைவு செய்யப்படுகிறது. மாத விடாய் வட்டத்தின் 14ஆம் நாளே இதற்குப் பொருத்தமுடையதாகும். பிறப்பு உறுப்புகளை நன்கு தொற்று நீக்கிய பின், எக்ஸ் கதிரில் தெரியக் கூடிய மருந்து உட் செலுத்தப்படும். இதன் மூலம் கருப் பையையும், சூல் குழலையும், நோய் நிலைகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். சூல் குழல் நல்ல நிலையில் திறந்திருந்தால், உட்செலுத்தப்பட்ட மருந்து உதரவுறைக் குழிவிலும், சிறு குடல் மீதும் காணப்படும். சூல் குழல் நீர்மம் கொண்டிருந்தால், அயோடின் நீர்மம் வெளிப்படாது. சிலர் எக்ஸ் கதிர்ப் படங்கள் நன்கு தெரிய, 50% டையடோனும், 6% பாலிவினைல் ஆல்கஹாலும், நீரும் கொண்ட கரைசலைப் பயன் படுத்துகின்றனர். இம்மருந்து விரைவிலேயே உறிஞ்சப் படுகிறது. திசு மறு வினையோ, கூபகத்தில் ஒட்டும் பொருள்கள் உண்டாவதோ அரிது. அயோடின் கொண்ட பாப்பி விதை எண்ணையை விட மேற்கூறியது சிறந்தது எனக் கருதுவர்.
உருப்பெருக்கிக் கண்ணாடியில் வயிற்றை நோக்கும் போது, 30 நொடிக்கு மேல் எக்ஸ் கதிர் விழக் கூடாது. இரண்டு எக்ஸ் கதிர்ப் படங்களே எடுக்கலாம். சூல் குழலின் உடற்கூற்று இயல் தன்மையை அறிவதுடன், கருப்பையின் பிறவி ஊனங்கள், கருப்பை ஊனங்கள், கருப்பையகத் தொங்கு தசை, தசைப் புற்று இருப்பதையும் கண்டு பிடிக்கலாம். —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 666)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ts7z6heh/
தமிழ்“சூல் குழல் வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ts7z6heh/APA
Oliyon Research. (2026). சூல் குழல் வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ts7z6heh/MLA
"சூல் குழல் வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ts7z6heh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment