இத்தாலிய அரசுக்கும் போப்பாண்டவருக்குமிடையே ஏற்பட்டன. இத்தாலியப் படைவீரர்கள் கி.பி. 1870–ஆம் ஆண்டில் உரோமாபுரியில் நுழைந்தமையால், போப்பாண்டவருக்கும் இத்தாலிய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இலட்டிரான் உடன்படிக்கைகள் (Lateran Treaties) இம்மோதலை முடிவுக்குக் கொணர்ந்தன. இவ்வுடன்படிக்கைகளின் பயனாக, வத்திகன் (Vatican) மாநகரம் தனியொரு சுதந்திர நாடாக அமைய வழிபிறந்தது. வல்லாண்மைக் கட்சி (Fascist) அரசு உரோமனியக் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இத்தாலிய அரசுக்கும் இடையே நல்லுறவு உடன்படிக்கையை உறுதி செய்தது. இத்தாலிய அரசு கி.பி. 1870-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்ட போப்பாண்டவர் ஆட்சிப் பகுதிக்கு ஈடாகப் பெரும் தொகை ஒன்றினை, 1922–29–ஆம் ஆண்டுகளில் போப்பாண்டவராயிருந்த பதினோராம் பயசு என்பார் பெற்றுக்கொண்டார். வத்திகனின் சிறைக் கைதிபோல் இருந்த போப்பாண்டவரின் நிலையும் இதனால் மாற, அவருக்குரிய மதிப்பும் உயர்ந்தது. இவ்வுடன்படிக்கைகள் 1929 – ஆம் ஆண்டில் ஏற்பட்டன.