உபாகமம்
upākamam
சிவபெருமானால் செய்யப்பட்ட சிவாகமங்கள் அல்லது சைவாகமங்கள் ‘மூலாகமங்கள்’ என்றும் ‘உபாகமங்கள்’ என்றும் இரு வகைப்படும்.
சிவபெருமானால் செய்யப்பட்ட சிவாகமங்கள் அல்லது சைவாகமங்கள் ‘மூலாகமங்கள்’ என்றும் ‘உபாகமங்கள்’ என்றும் இரு வகைப்படும். அவற்றுள் சிவபெருமான் படைப்புக் காலத்திலே முதற்கண் செய்து சிலருக்கு உபதேசித்த ஆகமங்கள் ‘மூலாகமங்கள்’ எனப்படும். அவை காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டாகும். அம்மூலாகமங்கள் ஒவ்வொன்றின் சார்பாகவும் அவற்றின் பொருளை அவ்வப்பொழுது சிலருக்கு அப்பெருமான் இனிது விளக்கிச் செய்த ஆகமங்கள் ‘உபாகமங்கள்’ எனப்படும். ஒவ்வொரு மூலாகமத்திற்கும் உபாகமங்கள் பல உண்டு. அனைத்து ஆகமங்கட்கும் உரிய உபாகமங்கள் இருநூற்றேழு. ‘இருபதும் எட்டுமே மூலம், உபவேதம் இருநூறும் எழும் என எண்’ என்பது சைவ சமய நெறி (பொது இலக்கணம்–336). ஒவ்வோர் ஆகமத்திற்கும் உரிய உபாகமங்கள் இத்தனை என்பதையும் அவற்றின் பெயர்களையும் இக்குறள் வெண்பாவின் உரையிற் காணலாம். சி.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 924)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqqhzncg/
தமிழ்“உபாகமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqqhzncg/APA
Oliyon Research. (2026). உபாகமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tqqhzncg/MLA
"உபாகமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqqhzncg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment