குறுவட்டு

kuṟuvaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுவட்டு (பெ) - இறுவட்டு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுவட்டு)
2.
1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்க முறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற்கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடகமாக அறிமுகம் ஆனது. இது மின்காந்த வட்டுகளிலிருந்து வேறுபட்டது. பள பளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங்கள் கேட்கக்கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ள லேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தரவு படிக்கப்படுகிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சிலவேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2. சிடி-ரோம், சிடி ரோம்/எக்ஸ்ஏ, சிடி-ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிஐ என்று பல பெயர்களில், பல்வேறு வகையான தரவு வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல்வேறு படிப்பு/எழுது வேகங்களில் மற்றும் கொள்ளளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. — compact disc
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 290)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tq8yyeu9/

தமிழ்
“குறுவட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tq8yyeu9/
APA
Oliyon Research. (2026). குறுவட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tq8yyeu9/
MLA
"குறுவட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tq8yyeu9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment