அதங்கோட்டாசான்
ataṅkōṭṭācāṉ
தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர்.
தலைச்சங்கத் தலைமைப் புலவராகிய அகத்தியருடைய பன்னிரு மாணவர்களுள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படுபவர். முதல் மாணாக்கர் தொல்காப்பியர். அவர் எழுதிய தொல்காப்பியம் என்னும் நூல், நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்தில் தலைமைப் புலவராக இருந்த அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இச்செய்தியினைத் தொல்காப்பியப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் கூற்றால் அறியலாம். “அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து” என்பது அப்பாயிரப்பகுதி, பனம்பாரனார் இவரை, “அறங்கரைநாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என அப்பாயிரத்துள் பாராட்டியுள்ளார். இதனால் இவரது வடமொழிப் புலமை நன்கு புலனாகும். தொல்காப்பியம் அரங்கேற்றப்படுங்கால், இவர் அதில் குற்றங்கூற, அதற்குத் தொல்காப்பியர் விளக்கங் கூறினார் என்பர். ஆதங்கோடு என்பது ஓர் ஊர், அவ்வூரினராதலின் இவர் அதங்கோட்டாசான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் எனத்தெரிகிறது. இவரது இயற்பெயர் தெரியவில்லை. அதங்கோடு என்பது சேர நாட்டிலுள்ள திருவிதாங்கோடு என்று சிலர் கருதுவர்.ஆர்.கி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 328)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tp4vu9hv/
தமிழ்“அதங்கோட்டாசான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tp4vu9hv/APA
Oliyon Research. (2026). அதங்கோட்டாசான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tp4vu9hv/MLA
"அதங்கோட்டாசான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tp4vu9hv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment