இலாட்வியா
ilāṭviyā
முன்னர்ச் சுதந்திர நாடாக இருந்து, இப்போது உருசியாவின் குடியரசுகளுள் ஒன்றாகி உள்ளது.
முன்னர்ச் சுதந்திர நாடாக இருந்து, இப்போது உருசியாவின் குடியரசுகளுள் ஒன்றாகி உள்ளது.
எல்லைகள்
மேற்கில் பால்டிக்குக் கடலும், வடக்கில் எசுதோனியாவும் பைலோருசியாவும், கிழக்கில் உருசியக் கூட்டாட்சிச் சோவியத்துக் குடியரசும் (Russian SFSR), தெற்கில் இலிதுவேனியாவும் இலாட்வியாவின் (Latvia) எல்லைகளாகும்.
இலாட்வியா 1918 முதல் 1940 வரை சுதந்திரக் குடியரசாக இருந்தது. 1940–இல் இது பொதுவுடைமைக் குடியரசுகளின் கூட்டாட்சி ஒன்றியத்தின் (U.S.S.R.) ஒரு பாகமாக இணைக்கப்பட்டது. இவ்விணைப்பை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வேறு சில நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இலாட்வியாவின் தலைநகர் இரீகா (Riga) என்னும் நகரமாகும். இந்நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த மாநகரும் துறைமுகமும் ஆகும். பால்டிக்குக் கடற்கரையில் இரீகா வளைகுடாவில் அமைந்துள்ளது. இலாட்வியாவின் பரப்பு 63,700 ச.கி.மீ. இதன் மக்கள் தொகை 23,65,000 (1970).
நிலம்
இலாட்வியாவின் நிலம் பெரும்பாலும் தாழ்நிலப் பகுதியாகும். குன்றுகளும் மலைப்பள்ளத்தாக்குகளும்
இலாட்வியா
ஆங்காங்கே அமைந்துள்ளன. பால்டிக்குக் கடலையும், இரீகா வளைகுடாவையும் பெரும்பாலும் மென்மணலையும், தாழ்ந்த களிமண் கடற்கரைகளையும் எடுப்பான உப்பங்கழிகளையும் மணல் மேடுகளையும் கொண்டு விளங்குகிறது இலாட்வியா. இங்குப் பல சிறு ஏரிகளும் சதுப்பு நிலங்களும் உள்ளன. இந்நாட்டின் மொத்த நிலத்தில் 40 விழுக்காடு காடுகளாகும். நடு இலாட்வியாவிலுள்ள இந்நாட்டின் மலையுச்சி 312 மீட்டர் உயரமுள்ளது.
ஆறுகள்
மேற்குத் தீவினா இலாட்வியாவின் சிறப்பான ஆறாகும். இது வடமேற்கில் பைலோருசியாவின் குறுக்காக ஓடி, நடு இலாட்வியாவில் பாய்ந்து, இரீகா வளைகுடாக் கடலில் கலக்கிறது. இலாட்வியாவிற்கு 472 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல தங்குமிடங்கள் உள்ளன.
தட்பவெப்பநிலை
இலாட்வியா மித வெப்ப மண்டலத்தில் உள்ள குடியரசாகும். இங்கு ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 செ.மீ. மழை பொழிகிறது.
பொருளாதாரம்
இலாட்லியாவின் முக்காற்பங்கு வருவாய் செய்தொழில்களின் மூலம் கிடைக்கிறது. சோவியத்து அரசு அனைத்துத் தொழிற்சாலைகளையும் கட்டுப்படுத்துகிறது. மின்சாரக் கருவிகள், வீட்டுக்குப் பயன்படும் கருவிகள், இயந்திரங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள், பேருந்துகள், இருப்புப்பாதை வண்டிகள், உருக்கு போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வேளாண்மையால் இக்குடியரசு ஐந்திலொரு பங்கு வருவாயைப் பெறுகிறது. பார்லி, பிளாக்சு, ஓட்சு, உருளைக்கிழங்கு, ‘ரை’ போன்றவை விளை பொருள்கள், பால்பண்ணை, கால்நடைப்பண்ணை போன்ற தொழில்களிலும் பல குடியானவர்கள் சோவியத்து உருசியாவின் அரசு ஈடுபட்டுள்ளனர் இலாட்வியாவின் பண்ணைகளைக் கூட்டுறவுப் பண்ணை முறையில் நடத்துகிறது. குடியானவர்கள் பண்ணையில் உற்பத்தி செய்யும் பொருளில் பங்கைப் பெறுகிறார்கள்.
வரலாறு
இவாட்வியாவின் வரலாறு, செருமானியச் செல்வாக்கில் இலாட்வியர் இருந்தகாலம் எனவும். சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் எனவும் இருவகைப்படும். செருமானியச் செல்வாக்கில் இலாட்வியா இருந்த காலமான 13–ஆம் நூற்றாண்டு முதல் 16–ஆம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம் கிறித்தவச் சமயம் புகுத்தப்பட்ட காலமாகும்.
சோவியத்து உருசியாவின் செல்வாக்கில் வந்த காலம் 18–ஆம் நூற்றாண்டாகும். இக்காலகட்டத்தில் 22 ஆண்டுகள் இலாட்வியா சுதந்திர நாடாக விளங்கியது.
இரண்டாம் உலகப் பெரும்போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர் உருசியாவும் செருமனியும் கிழக்கு ஐரோப்பாவைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இலாட்வியாவை வற்புறுத்தி, அந்நாட்டில் இராணுவத்தளங்களை அமைத்துக் கொள்ளும் உடன்படிக்கையை உருசியா செய்துகொண்டது. உருசியாவின் படைகள் 1940, சூன் மாதத்தில் இலாட்லியாவைக் கைப்பற்றிக் கொண்டன. இலாட்வியாப் பொதுவுடைமைக் கட்சி அரசாங்கத்தை நடத்தலாயிற்று. அதே ஆண்டு ஆகசுட்டுத் திங்களில் இலாட்வியா சோவியத்து உருசியாவின் பகுதியாயிற்று.
செருமானியப் படைகள் இலாட்வியாமீது 1941–இல் படையெடுத்தன. இலாட்வியா செருமானியர் வசம் 1944 வரை இருந்தது. அந்த ஆண்டில் சோவியத்துப் படைவீரர்கள் இலாட்வியாவை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்போது இலாட்வியாவைக் கைப்பற்ற வந்த உருசியர்களைப் பல இலாட்விய மக்கள் தடுத்தனர். ஆனால் சோவியத்துப் படைவீரர்கள் தடுத்தவர்களைக் கொன்று குவித்தோ நாடு கடத்தியோ எதிர்ப்பை அடக்கினர்.
உருசியர்களின் ஆட்சியின் விளைவாக இலாட்வியாவில் வாழ்க்கை பெரும் மாறுதலடைந்துள்ளது. அங்கு வலிமை மிக்க பொதுவுடைமை அரசாங்கத்தை உருசியா நிலைநாட்டி. அனைத்து நிலங்களையும் தொழிற் சாலைகளையும் நாட்டுடைமையாக்கியது மேலும் எண்ணற்ற உருசியர்கள் இலாட்வியாவில் குடியேறி அதன் பண்பாட்டையும் மொழியையும் பெருமளவு மாற்றிவிட்டார்கள். எனினும் இலாட்வியர்கள் உருசியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 364)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tn8t9ytr/
தமிழ்“இலாட்வியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tn8t9ytr/APA
Oliyon Research. (2026). இலாட்வியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tn8t9ytr/MLA
"இலாட்வியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tn8t9ytr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment