அமைச்சு

amaiccu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமைச்சு)
2.
திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலேயிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலேயிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச்சொல் லென வாதிடுவர். பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் "பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல்களையும், பண்புகளையும் உடையவனாக இருக்கவேண்டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 27)
3.
அமைச்சர், 6 உறுப்புகளில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 25)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tgn8fpnz/

தமிழ்
“அமைச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgn8fpnz/
APA
Oliyon Research. (2026). அமைச்சு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/tgn8fpnz/
MLA
"அமைச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgn8fpnz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment