{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tgn8fpnz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tgn8fpnz/", "kind": "word", "headword": "அமைச்சு", "romanization": "amaiccu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:08.151827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அமைச்சு"}, {"n": 2, "definition_ta": "திருக்குறளில், அமைச்சர்களது கடமைகள், ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல் ஆமாத் தியர் என்ற வட மொழியிலேயிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலேயிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச்சொல் லென வாதிடுவர். பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் \"பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல்களையும், பண்புகளையும் உடையவனாக இருக்கவேண்டும். இவை அமைவு பண்பு கொண்ட அறிவுடையோன். அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே, அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன், அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு, இயற்கை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 27"}, {"n": 3, "definition_ta": "அமைச்சர், 6 உறுப்புகளில் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 25"}]}}