மின்னணுவியலில் ஒரு கருவி இயங்கும் முறையை விளக்கமாக ஆய்ந்தறியவும், சுற்றுகளைத் திட்டமிட்டு வடிவமைக்கவும், இயக்கங்களை ஆய்ந்து அறியவும், சுற்றில் திருத்தியாகவோ (rectifier) மிகைப்பியாகவோ பயன்படுத்தும் போது, மின்னணுவியல் சுற்றின் செயல்படும் திறமையைக் கண்டறியவும், சிறப்பியல்பு வரைவுகள் (characteristic curves) பெரிதும் பயன்படுகின்றன. மின்னழுத்தம் வேறுபடும் போது, கருவியின் மின்னோட்டம் மாறுபடும். இதை வைத்து வரையப்படும் வரைவு அக்கருவியின் மின்னழுத்த மின்னோட்டச் சிறப்பியல்பு வரைவாகும். ஒரு கருவியின் உள்ளீட்டுச் சைகைக்கும், வெளியீட்டுச் சைகைக்கும் வரையப்படும் வரைவு, உள்ளீட்டு—வெளியீட்டுச் சிறப்பியல்பு வரைவு ஆகும். —க.அர. பழனிச்சாமி