அழகிய சொக்கநாதப் பிள்ளை
aḻakiya cokkanātap piḷḷai
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள தச்சநல்லூர் என்னும் ஊரினர். சைவ வேளாள மரபினைச் சார்ந்த இவர் தந்தை வன்னியப்பப் பிள்ளை. இளமையில் தம் தந்தையாரிடமும் சிறிய தந்தையாரான கணபதி வாத்தியாரிடமும் கல்வி பயின்றார். சுவைபட உரையாடுவதில் வல்லவர். இவர் முனிசீப்பு நீதிமன்றத்தில் பிரதி எழுதும் பணி மேற்கொண்டிருந்தார். மாதம் பத்து ரூபாய் ஊதியமாகப் பெற்றார். தங்கள் வருமானம் எவ்வளவு என வினவுவார்க்கு, ‘எனக்கு மாசம் பத்து வந்துகொண்டிருக்கிறது’ என்று நயம்பட மொழிவார். மாசம் பத்து எனவும் மாசம் பத்து எனவும் இத்தொடர் இருபொருள்படும். இராசவல்லிபுரம் முத்துச்சாமிப் பிள்ளை என்னும் பெருஞ் செல்வரோடு நட்பு மிகக்கொண்டிருந்தார்.
இவர் பல்வகைச் சிற்றிலக்கிய நூல்களை இயற்றியுள்ளார். அவை வருமாறு:
இராசை மாதரில் வீற்றிருக்கும் கோமதி அம்மை பேரில் பதிகம், முத்துசாமிப்பிள்ளை காதற்பிரபந்தம், காந்திமதியம்மை பேரில் கும்மிப் பாடல், காந்திமதியம்மை பேரில் கீர்த்தனை, காந்திமதியம்மை பேரில் இன்னிசைப்பா, மண்டல மாலை, கிருட்டிணன் கும்மி முதலானவை, கோதை கும்மிப்பாடல்கள், சீவில்லிபுத்தூர்க் கோதையந்தாதி, கோமதியம்மை இன்னிசை மாலை, சிங்கார கலிதாமஞ்சரி, காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், அனவரததானநாதர் பதிகம், காந்திமதியம்மை பதிகம், காந்திமதியம்மை கலித்துறையந்தாதி, நெல்லை நாயக மாலை, சங்கர நயினார் கோயில் அந்தாதி. இராசை மாநகர் என்பது சங்கர நயினார் கோயிலின் வேறு பெயராகும். முத்துசாமிப் பிள்ளைக் காதற்பிரபந்தம் 860 வெண்செந்துறைகளால் ஆகியது. இடையிடையே சிறுதலைப்புகளைக் கொண்டது. கோதை கும்மிப் பாடல்கள் என்னும் நூல் ஆண்டாளைப் பற்றியது. இராசவல்லிபுரம் முத்துச் சாமிப்பிள்ளை மீது கண்ணிகள், பதங்கள் பலபாடியுள்ளார். இராசை மாநகர்க் கோமதியம்மை மீது பாடப்பட்ட பதிகத்திலுள்ள 11 செய்யுள்களும், ‘மணவாளரைக் கருதியருள் சேர் தவப் பெண்ணென வருகோமதிப்பெணுமையே’ என்று முடிந்துள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 923)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxvebd88/
தமிழ்“அழகிய சொக்கநாதப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sxvebd88/APA
Oliyon Research. (2026). அழகிய சொக்கநாதப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sxvebd88/MLA
"அழகிய சொக்கநாதப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sxvebd88/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment